ஆற்றலாக நான்
Chapter 28: ஆற்றலாக நான் · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about ஆற்றலாக நான்?
ஆற்றலாக நான் நான் உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கின்றேன்; தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகின்றேன்; விதைகளை எடுத்துச் சென்று பல இடங்களிலும் தூவுகின்றேன். பூவின், தேனின், கனியின், தாவரத்தின், உயிரினத்தின் மணத்தை என்னில் சுமந்து, புவியின் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுகின்றேன். இவை மட்டுமல்ல, உங்கள் நவீனத் தொலைத்தொடர்பின் மையமாகவும் நானே உள்ளேன். ' காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்' எனும் புதுமொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன்.
📖 10th Tamil Textbook · Page 36
Read from the source
Complete lesson
ஆற்றலாக நான் நான் உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கின்றேன்; தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகின்றேன்; விதைகளை எடுத்துச் சென்று பல இடங்களிலும் தூவுகின்றேன். பூவின், தேனின், கனியின், தாவரத்தின், உயிரினத்தின் மணத்தை என்னில் சுமந்து, புவியின் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுகின்றேன். இவை மட்டுமல்ல, உங்கள் நவீனத் தொலைத்தொடர்பின் மையமாகவும் நானே உள்ளேன். ' காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்' எனும் புதுமொழிக்கு வித்தாகிறேன்.
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன். உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே. மனிதனால் மாசடையும் நான் ஒவ்வொரு விநாடியும் நான் உங்களால் மாசுபடுகிறேன். குப்பைகள், நெகிழிப் பைகள், மெதுஉருளைக
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →