மரம் தரும் வரம் நான்
Chapter 29: 10th Tamil · Part 13 · Tamil · TA medium
Read from the source
Complete lesson
மரம் தரும் வரம் நான் ஒரு மணித்துளிக்கு முதல் முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கரியமில வளியை எடுத்துக்கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள். நல்ல முறையில் குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுங்கள்; பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தாருங்கள்; மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்; கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள்; வீட்டுச் சமை யலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிடுங்கள். நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் ன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறீர்கள். என்னை, ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதாது. நீங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். ஆம், என்னைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதுவே என் ஆசையாகும். இதுவே உங்களின் எதிர்கால நலனும் ஆகும். ஒருகாலத்தில் குழாயிலிருந்து அப்படியே தண்ணீர் குடித்த நாம், நீர் மாசுபாடு அடைந்ததன் காரணமாக அதனை த் தூய்மைப்படுத்தியும் விலைக்கு வாங்கியும் குடிக்கும் நிலையில் இருக்கிறோம். இப்போது காற்றும் மாசுபாடு அடைந்துவருகிறது. தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்பது போன்று, உயிர்வளியையும் (ஆக்சிஜன்) விற்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →