Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 14grammar_exercise

நாட்டுவளமும் சொல்வளமும்

Chapter 8: தமிழ்ச்சொல் வளம் · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about நாட்டுவளமும் சொல்வளமும்?

நாட்டுவளமும் சொல்வளமும் ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர். நாட்டுவளம், சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டுவளத்தை உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, இலைக்குத் தரப்பட்டுள்ள பல பெயர்களை ச் சொல்லலாம். இலையின் வன்மை, மென்மை ஆகிய தன்மைகளை க் கொண்டு தாள், ஓலை, தோகை, இலை எனத் தமிழில் பலவகைப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ள த்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி.

📖 10th Tamil Textbook · Page 14

Read from the source

Complete lesson

நாட்டுவளமும் சொல்வளமும் ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர். நாட்டுவளம், சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டுவளத்தை உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, இலைக்குத் தரப்பட்டுள்ள பல பெயர்களை ச் சொல்லலாம்.

இலையின் வன்மை, மென்மை ஆகிய தன்மைகளை க் கொண்டு தாள், ஓலை, தோகை, இலை எனத் தமிழில் பலவகைப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ள த்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி.

தமிழின் சொல்வளத்தை உணர்ந்த பாவாணர் அதன் சொல்வளத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்காட்டி விளக்குகிறார். அவர் கருத்தின் வழியே கடலெ னப் பரந்த தமிழ்ச் சொல்வளத்தை அறியலாம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →