Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 20question

ஒரு தோணி

Chapter 15: ஒரு தோணி · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about ஒரு தோணி?

ஒரு தோணி - ப.சிங்காரம் புலம்பெயர்ந்த தமிழர்களில் இந்நூலாசிரியரான ப. சிங்காரமும் ஒருவர். இவர் இந்தோனே சியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கல ந்த கதைதா ன் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம். பாண்டியன் இப்புதினத்தின் கதை நாயகன். அவன் கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி. கொளுத்திக்க ண்டிருந்த வெ யில் இமைநேரத்தில் மறைந்துவிட்டது; புழுங்கிற்று. பாண்டியன் எழுந்துபோய் அண்ணாந்து பார்த்ததான். மேகப் பொதிகள் பரந்து திரண்டு ஒன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழுவென நெ ளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம்.

📖 10th Tamil Textbook · Page 20

Read from the source

Complete lesson

ஒரு தோணி - ப.சிங்காரம் புலம்பெயர்ந்த தமிழர்களில் இந்நூலாசிரியரான ப. சிங்காரமும் ஒருவர். இவர் இந்தோனே சியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கல ந்த கதைதா ன் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம்.

பாண்டியன் இப்புதினத்தின் கதை நாயகன். அவன் கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி. கொளுத்திக்க ண்டிருந்த வெ யில் இமைநேரத்தில் மறைந்துவிட்டது; புழுங்கிற்று. பாண்டியன் எழுந்துபோய் அண்ணாந்து பார்த்ததான்.

மேகப் பொதிகள் பரந்து திரண்டு ஒன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழுவென நெ ளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம்.

கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன . வானம் உடைந்து கொட்டுகொட்டென்று வெள்ளம் கொட்டியது. றாவளி மாரியும் காற்றும் கூடிக்கல ந்து ஆடிக் குதித்துக் கெக்கலித்தன . தொங்கான் அப்படியும் இப்படியுமாய்த் தாவிக்குதித்து விழுந்து திணறித் தத்தளிக்கிறது.

எலும்புகள் முறிவதுபோல் நொறுநொறு நொறுங்கல் ஒலி. தலைக்கு மேல் கடல்… இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம்… எங்கிருந்தோ தொங்கிய வடக்கயிற்றை வலக்கையால் பற்றிக் கிடந்தான் பாண்டியன். திடுமென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்துத் தென்பட்டன.

பலகை அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான் கத்துகிறான்:

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →