📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 41grammar_exercise

பாடப் பகுதி

Chapter 1: கதையியல் · Advanced Tamil

பாடப் பகுதி l தமிழ்ச்சிறுகதை - தோற்றமும் வளர்ச்சியும் l சிறுகதை வாசிப்பும் திறனாய்வும் l சிறுகதை எழுதும் கலை l யானையின் சாவு - சார்வாகன் l பூ உதிரும் - ஜெயகாந்தன் l இறுக மூடிய கதவுகள் – ஆர். சூடாமணி l நசுக்கம் – சோ. தர்மன் l 'பேபி' குட்டி – கே. பாலமுருகன் l பசி – தாமரைச்செல்வி l அஷமஞ்சா பாபுவின் நாய் – சத்யஜித் ரே l ரப்பர் பந்து – எஸ்.ராமகிருஷ்ணன் l பனித்துளியின் பேச்சு– ஹெச்.ஜி.ரசூல் l ஒற்றைக்குரல் – இளங்கோ கிருஷ்ணன் தமிழில் கதைஇலக்கியம் குறித்த சான்றுகள் தொல்காப்பியத்தில் கிடைப்பதன் மூலம், அதன் தொன்மையை நாம் அறியலாம்.

தமிழின் மரபுப்பண்புகளோடும் மேலை நாட்டினரிடமிருந்து பெறப்பட ட வடிவநேர்த்தியோடும் தமிழ்ச்சிறுகதைகள் தோன்றி வளர்ந்தன. இப்பாடப்பகுதியில் தமிழ்ச்சிறுகதைகளின் வளர்ச்சி குறித்தும், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய படைப்பாள ர்கள் குறித்தும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. நல்ல கதை இலக்கியங்களை படிப்பதற்கும் திறனாய்வு செய்வதற்குமான வழிகாட்டல், பொருத்தமான எடுத்துக்காட்டுகளோடு அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவதற்காக வழங்கப்படும் பயிற்சி, சிறந்த படைப்பார்வத்தை உண்டாக்கும்.

மேலும், இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள சிறுகதைகள், அயலக எழுத்தாளர் சிறுகதை, அயலகச் சிறுகதை, மொழிபெயர்ப்புச் சிறுகதை, குறுங்கதை, நுண்கதைகள் ஆகியன படிப்போருக்குப் புதிய திறப்புகளை ஏற்படுத்தும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →