📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 130question

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Chapter 2: Front Matter · Tamil

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு XI Std Tamil பிறந்தார். தம்முடைய பதினேழு வயதில் தந்தையை இழந்த ஆனந்தரங்கர், பிரெஞ்சு மேலதிகாரி ‘ அலனுவார்’ உதவியால் பர ங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும் சாயம் தோய்க்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார். உழைப்பும் உண்மையும் உறுதியும் மிக்க ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் ‘ துய்ப்ளே’ காலத்தில் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். வல்லாண்மை மிக்க பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராக, மிகுந்த அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்தார்.

ஆனந்தரங்கர், தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார். நாட்குறிப்பு வெளிப்படுத்தும் அரசியல் செய்திகள் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு அக்கால கட்டங்களில் புதுவையிலும், தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும் நிகழ்ந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. . .1736ஆம் நாள் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது.

இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவழித்த பெருந் தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார். பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர்தொனே ஆங்கிலேயரின் கட்டுப்பா ட்டில் இருந்த சென்னையை, 1746இல் கைப்பற்றியதையும் அதனால் சினமுற்ற ஆற்காடு நவாபு அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டதையும் நேரில் கண்டு உரைப்பதுபோல் நாட்குறிப்பில் கூறியுள்ளார். தேவனாம்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெ டுப்பு, புகழ் பெற்ற ஆம்பூர் போர் பற்றிய செய்திகள், தஞ்சைக் கோட்டை மீது நடத்திய முற்றுகை, இராபர்ட் கிளைவின் படையெ டுப்பு, ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது முதலியவற்றையெல்லாம் வரலாற்று ஆசிரியர் போன்று நாட்குறிப்பில் விளக்கிக் கூறியுள்ளார். 1758ஆம் ஆண்டு இறுதியில் சென்னைக் கோட்டை முற்றுகையை லல்லி என்பார் தொடங்கினார்.

கோட்டையை இடித்தும் வீடுகளைத் தரை மட்டமாக்கியும், மதிலை இடித்து அகழியைத் தூர்த்தும் கூடக் கோட்டையை லல்லியால் கைப்பற்ற ஆனந்தரங்கரின் கையெ ழுத்து தெரியுமா? உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சாமுவேல் பெப்பிசு ஆவார். ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய அவர் ‘இரண்டாம் சார்லஸ்’ மன்னர் காலத்து நிகழ்வுகள ( - ) நாட்குறிப்பாக ப் பதிவு செய்துள்ளார். இவரைப் போ லவே ஆனந்தரங்கரும் .

. முதல் . .1761வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.

இதனால், ஆனந்தரங்கர் இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுகிறார். XI Std Tamil முடியவில்லை. அக்கோட்டையின் கவர்னர் ‘மேஸ்தர் பிகட்’ மகத்தான வெற்றி பெற்றார். நாட்குறிப்பு வெளிப்படுத்தும் சமுதாயச் செய்திகள் இவரின் நாட்குறிப்பு ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

பண்பா டு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்வுகளை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார். ’ . .1739ஆம் நாள் புதுச்சேரியின் ஆளுநர் ‘துய்மா’ பிறப்பித்த ஆணையில், புதுச்சேரிப் பட்ட ணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழிப் பகுதியிலும் பட்ட ணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களுக்கு ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறியவர்களிடமிருந்து பெறப பட்ட தண்டத் தொகையில் இரண்டு பணம் பிடித்துக் கொடுப்பவருக்கும், மீதி நான்கு பணம் சாவடிக்கும் உரியது என்று அறிவிக்கப்பட்டது.

இது தெரியாமல் பல ரும் தண்டம் கட்டியதாக’ ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார். நீதி வழங்குதல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளையும் இவருடைய நாட்குறிப்பு, பதிவு செய்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →