ஈரத்தையும் வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் பெரிதும் தடைபட்ட து. புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745ஆம் ஆண்டில் தடைபட்டுப் பெரும் பொ ருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது. புதுச்சேரி வணிகம் முழுவதும் வீழ்ந்தது.
மக்கள் எல்லோரும் கப்பல் வருகையையே எதிர்பார்க்கத் தொடங்கினர். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடப் பணம் இல்லாமல் ஆளுநர் துன்பப்பட்டார். இந்நிலையில் . .1746ஆம் நாள் லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
இது பற்றி ஆனந்தரங்கர், “கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும் நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போல வும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போல வும், நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போல வும், தேவாமிர்தத்தைச் சுவைத்தது போல வும் ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள் காசு – ஒரு ரூபாய் காசு – பணம் பணம் – ரூபாய் பணம் – ஒரு வராகன் பொன் – / வராகன் வராகன் – அல்லது . ரூபாய் மோகரி – ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம் சக்கரம் – / வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம். XI Std Tamil மக்கள் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள் அவருடைய இறுதிக்கால நாட்குறிப்புகள் ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகையையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் மிக விரிவாகப் பேசியுள்ளன.
பிப்ரவரியில் புதுச்சேரியைத் தாக்க ஆங்கிலேயக் கப்பல்கள் வந்துகொண்டிருந்ததாகவும் செஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை வென்று ஆங்கிலத் தளபதி, புதுச்சேரியை நெருங்கிவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது. ஆங்கிலேயப் படைகள் சாரம் வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்ததும் புதுச்சேரி நகரில் பீதி நிலவியது. தேவனாம்பட்டணத்தில் மேலும் மேலும் துருப்புகளை ஆங்கிலேயக் கப்பல்கள் இறக்கின.
புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். புதுச்சேரியின் இவ்வாறான சூழ்நிலையில் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு இருந்த ஆனந்தரங்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. . .
திங்கள் கிழமை ஐந்து நாழிகைக்குப் பட்ட ணத்தின் மீது பீரங்கிக் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கர் மறைந்தார். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி ஏறத்தாழ இருபத்தை ந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றைப் பதிவுசெய்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 1761ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாளோடு முடிவடைந்துள்ளது. புதுச்சேரியின் முற்றுகை பற்றிய முடிவினைக் கூறாமலேயே நாட்குறிப்பும் முடிந்துள்ளது. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
இது வெளிப்படுத்தும் விரிவான செய்திகளை, வரலாற்றறிஞர் தம் குறிப்புரைகளின் துணையோடு கண்டறிய முடியும். ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் சில . ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர் . ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன் .
வானம் வசப்படும் – பிரபஞ்சன் புதுச்சேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில், புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகள முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது. அப்போது ஆளுநரிடம், ஆனந்தரங்கர், “இப்பட்டணத்தில் உம்முடைய அதிகாரம்தான் இறுதியானது. அநீதியாகவும் உண்மைக்கு மாறாகவும் நடக்க நீர் விரும்பினால் உம்மைத் தடுக்கும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை. ஆகவே , என்னைக் காவலில் போட விரும்பினால் உடனே செய்யலாம்.