📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 24grammar_exercise

ஆறாம் திணை

Chapter 2: Front Matter · Tamil

ஆறாம் திணை அ. முத்துலிங்கம் XI Std Tamil அகதி முகாமில் பேர் வரை இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல முகாம்க ள் இருந்தன என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். ஒரு மத்தியான நேரத்தின்போது அகதிகளாகிய நாங்க ள் மறியல் கைதிகள்போல வரிசையில் தட்டையேந்தி உணவுக்காக நின்றோம்.

இரண்டு கரண்டி எண்ணி என் தட்டில் விழுந்தது. அது மஞ்சள் நிறத்தில் சோறுபோலவே இருந்தது. பருப்பு முடிந்துவிட்டது. யாரோ ஒருவர் போட் டு முடித்த நீளமான இரவுச்சட்டையோடு நான் நெடுநேரம் அங்கே நின்றேன்.

அப்பொழுது நான் எனக்குச் சொல்லிக் கொண்டேன் ‘ இந்த நாள நன்றாக ஞாப கம் வை. இதுவே உன் வாழ்நாளில் ஆகக் கீழேயான தருணம். இனிமேல் இப்படி ஒரு கணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்’ . யாரோ போட் டு முடித்துத் தான மாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாகப் பல தேசங்களுக்கும் ஒரு ஞாப கத்துக்காகக் காவித் திரிந்தேன்.

ஒரு கால த்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் என்று நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மாறும் இடைவெ ளியில் எங் கோ எப்போதோ ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டுத் தப்பியது. உயிர் வாழும் திறமை சில வருடங்க ளுக்கு முன்னர் நான் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன்.

முப்பது வயதிருக்கும். உற்சாகமாக இருந்தார். இவருடையது வித்தியாச மான கதை. இலங்கையிலும் பாங்கா க்கிலும் சிறையில் இருந்திருக்கிறார்.

ரஷ்யாவில் பனிப்புதைவில் மயிரிழையில் உயிர் தப்பியவர். ஒன்பது நாள் விசா கெடுவை மீறித் தங்கியதற்காக, சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்க ள். கழுத்தில் மரப்பூட்டைப் போட் டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடித்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக்கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள்.

இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போ ய்ச் சேர்ந்தபோ து அவருடைய கள்ள பா ஸ்போர்ட்டை க் கண்டுபிடித்துவிட்டார்க ள். கையிலும் காலிலும் சங்கிலி மாட்டிக் கையிலே றாத்தல் கனமான இரும்புக்குண்டைக் காவக் கொடுத்து, நடத்திச் சிறைக்குக் கூட்டிச் சென்றார்கள். சிறைவாசம் முடிந்து, மூன்று வருடப் பயணத்துக்குப் பின்னர் கனடா வுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அகதியாக இருந்தபோ து வேலை தேடி கம்பெனிகளில் நேர்முகத் தேர்வுக்குப் போனா ர். எல்லோரும் அவரிடம், ‘உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?’ என்றே கேள்வி கேட்டார்க ள். ஆவது இடத்தில் அவர் இப்படிப் பதில் சொன்னார்.

‘ ஐயா, எனக்குக் கனடா அனுபவம் கிடையாது; ஆனால் , என்னிடம் நிறையத் திறமை' உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வ து. இன்றுவரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என் திறமை.’ இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமான ம் சராச ரி கனடியரின் வருமான த்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம்.

இது ஓர் உதாரணம்தான் . ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருடைய முகத்தில் நிரந்தரமாக இருக்கிறது. கூடவே அகதியாக வாழ்வதன் வலியும் . புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர்வது ஒன்றும் புதிதல்ல.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம்பெயர்ந்தபடியே இருக்கிறான். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பால ஆகிய ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும்; பல பாட ல்கள் தலைவன், தலைவி பிரிந்து போ வதைச் சொல்லும். பொருள்வயின் பிரிவு என்று சொல்வார்கள். பொருள் தேடப் போவதால் புலம் பெயர நேரிடுகிறது.

நற்றிணை ஆவது பாடலில் XI Std Tamil

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →