📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 175question

ஆஸ்கர் தமிழர் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறான சொற்களை உருவாக்கிக் கொள்ளும் முறைமைக்குக் கலைச்சொல்லாக்கம் என்று பெயர். அறிவியலுக்கு ஏற்புடைய பல கலைச்சொற்கள் வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. சில கலைச்சொற்கள் பொருத்தமில்லாமல் உள்ளன.

காலத்திற்கேற்ப வளரும் சில துறைகளில் கலைச்சொற்களின் தேவை மிகுதியாக இருக்கிறது. எனவே, நாம் கலைச்சொற்களை உருவாக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். முத்து : கலைச்சொற்கள் என்றால் என்ன? செழியன் : ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம்.

ஒரு மொழி தன் வேர்ச்சொற்களைக் கொண்டு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு உருவாக்கிக் கொள்ளும் போது மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு புதிய செழிப்பினைப் பெற்று மேலும் வளர்ச்சி பெறும். எடுத்துக்காட்டாக website, blog போன்றவை தகவல் தEொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள். இவற்றிற்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களாக உள்ள இணையம், வலைப்பூ போன்றவை தகவல்தொழில் நுட்பக் கலைச்சொற்கள் ஆகும்.

கலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கும். தமிழ்க்கனல் : அகராதியில், கலைச்சொற்கள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளதா? செழியன் : பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம். ஆனால், கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையானவிடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.

முத்து: கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் பற்றிக் கூறுங்கள் ஐயா. செழியன்: நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள்,வேளாண்மை,

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →