பகுபத உறுப்புகள் XI Std Tamil பெண்பால், ஒருமை, படர்க்கைஇடம் என்பனவற்றையும் ‘து’ என்னும் விகுதி அஃறிணை ஒன்றன்பால், படர்க்கைஇடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன. வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வே று இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்படுகிறது. எழுதுக - எழுது + க உரைத்த - உரை + த் + த் + அ செய்தல் - செய் + தல் படித்து - படி + த் + த் + உ இடைநிலை பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர். வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் கால இடைநிலை , எதிர்மறை இடைநிலை என இருவகைப்படுத்துவர்.
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்பர். கால இடைநிலை ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை எனப்படும். செய்தான் - செய் + த் + ஆன் செய்கிறான் - செய் + கிறு + ஆன் செய்வான் - செய் + வ் + ஆன் இவற்றுள் த் , கிறு , வ் என்பன கால இடைநிலைகள கும். இவை முறையே இறந்தகாலம், நிகழ்கால ம், எதிர்காலம் என்பனவற்றை உணர்த்துகின்றன.
இறந்தகால இடைநிலைகள் - த், ட், ற், இன் நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று எதிர்கால இடைநிலைகள் - ப், வ் எதிர்மறை இடைநிலைகள் - ஆ, அல், இல் எதிர்மறை இடைநிலை எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை, எதிர்மறை இடைநிலை ஆகும். ஆ என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும். உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும். ஓடாது - ஓடு + ஆ + து பேசான் - பேசு + (ஆ) + ஆன் காணலன் - காண் + அல் + அன் எழுதிலன் - எழுது + இல் + அன் பெயர் இடைநிலை ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெய ர்ப்பகுதியை விகுதியJோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை, பெயர் இடைநிலை ஆகும்.
ச் , ஞ் , ந் , த் , வ் ஆகிய மெய்கள் பெயர் இடைநிலைகள க வரும். தமிழச்சி - தமிழ் + அ + ச் + ச் + இ; இளைஞர் - இளை + ஞ் + அர்; ஓட்டுநர் - ஓட்டு + ந் + அர்; ஒருத்தி - ஒரு + த் + த் + இ; மூவர் - மூன்று + வ் + அர் XI Std Tamil சந்தி சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர். பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு, சந்தி எனப்படும். சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலைச் சந்தி என்றும் சொல்வர். ஓர் எழுத்துத் தோன்றுதலைச் சந்தி என்றும், மற்றைய திரிதலையும் கெடுதலையும் விகாரம் என்றும் வழங்குவர்.