பேச்சுமIொழியும் கவிதைமIொழியும் - இந்திரன் XI Std Tamil பல கதவுகள் திறக்கலாயின. மொழியின் சாவியைப் போட் டுத் திறக்கிறபோதெ ல்லாம் இதுவரையிலும் பெயர் சூட்டப்பட்டிராத பல வற்றை நானே என் கண்களால் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அவற்றிற்கு நானே எனக்குப் பிடித்தமான பெயர்களைச் சூட்டத் தொட ங்கினேன். பெயர்களுக்குக் கடந்தகால ம், நிகழ்கால ம், எதிர்கால ம் ஆகிய வண்ணங்களைப் பூசும் சக்தியை மொழி எனக்குக் கொடுத்தது.
அவற்றை விதவிதமான அடுக்குகளில் ஒருமையாகவும் பன்மையாகவும் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அடுக்கும் திறனை மொழி எனக்கு வழங்கியது. வாளினும் வலிமை மொழிவழியாக ஒன்றைப் பெயரிட்டு அழைக்கத் தொட ங்கியவுடன் அந்தப் பொ ருளின் மீது எனக் கொரு அதிகார ம் வந்துவிடுவதை உணர்கிறேன். குழந்தையாக இருந்தபோ து, “அம்மா, அம்மா” என்று அழைப்பேன். வேலையில் மூழ்கிய அம்மா, என்னைக் கவனியாதபோது திடீரென்று அவரது பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன்.
அவர் திடுக்கிட்டுத் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார். அப்போதுதான் என்னுடைய மொழி, பெயர்கள் இட்டு அழைத்தவுடன் அவற்றின் மீது ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்ததை உணரத் தலைப்பட்டேன். உடம்பின் ஒரு பகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதான ம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மெளனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கிறேன்.
இதுமட்டுமன்றி, கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் என்னுடைய மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைந்துவிடுகிறது. இந்தத் திடநிலையை அடைந்த மொழி அது அச்சிடப்பட்ட ஒரு கவிதையாக மாறுகிறபோது என்னிலிருந்து பிரிந்துபோ ய்விட்ட ஒரு பொருளாக மாறிவிடுகிறது. உலகை, மொழி கட்டியெழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியிலிருந்து நழுவுவதற்குத் தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது.
நேரடிமIொழி எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான் இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழி அப்படியன்று. எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது.
முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அதனால்தான், பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது. எழுத்துமொழியில் பேச்சை க் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு.
ஆனால் பேச்சு என்பது அப்படிப்பட்டதன்று. பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு. உண்மையில் சொல்லப்போனால் பேச்சு என்பது மொழியில் நீந்துவது. பேச்சுமொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.
இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவதுபோல அமைக்கின்றனர். இதையே அவர்கள் நேரடிமொழி எனக் கருதுகின்றனர். XI Std Tamil நேரடிமொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒருபோ தும் பழமை தட்டுவதில்லை. அது வேற்றுமொழி ஆவதில்லை.
அது எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்த வரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை