📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 16question

பேச்சுமIொழியும் கவிதைமIொழியும் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

பிரதிபலிக்கும் பழைய பூங்காக்களோ எழுதப்படாத தாளின் தூய வெண்மையின் மீது என் விளக்கிலிருந்து வீசும் பயனற்ற ஒளியோ தன் குழந்தைக்குப் பாலூட்டும் அவ்விளம்பெண்ணோ எதுவும் தடுக்காது கடல்நீரில் நனையும் இந்நெஞ்சை. நான் கிளம்பிச் செல்வேன்! பாய்மரங்களைத் தூக்கியெறிந்து விட்டிருக்கும் நீராவிக் கப்பலே புறப்படு, தொலைதேச இயற்கையை நோக்கி. இரக்கமற்ற எதிர்பார்ப்புகளில் மனமுடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்பலை இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை !

அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை.. ஆனால், இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை! பாப்லோ நெரூடா தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.

தன்னுடைய கவிதைகளுக்காக 1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். எத்துணைப் பெயர்கள்! திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும் ஆண்டு முழுவதுடன் வாரமும் சிக்கிக் கொண்டுள்ளன. களைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது.

பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. இரவில் நான் உறங்குகையில் என்னை என்னவென்று அழைக்கின்றனர் அல்லது என்னவென்று அழைப்பதில்லை? தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்? XI Std Tamil திட்டமோ, ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றைச் சுட்டுவதுபோல க் காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்துபோ கிறது.

அறியப்பட்டிராததை நோக்கி நகர்கிற அதே நேரத்தில் நெரூடாவின் கவிதை விரிந்ததாகவும் மையத்தை நோக்கி நகர்வதாகவும் இருக்கிறது. கவிதை என்பது எது? என்ற இந்தக் கேள்விக்கு எனக்குத் தற்சமயம் கிடைக்கும் விடை இதுதான். கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப் புச் செயல்பாடு .

எனவே , கவிதை என்பதே மொழிதான். கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது. எனவே , எத்தகைய மொழியை நாம் பயன்படுத்துகின்றோமோ அதன் குணாம்சங்கள யும் பேச்சுவழக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது கவிஞனின் கடமை யாகிறது. இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மIொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

ஒரிய மIொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்னும் நூலின் மIொழிபெயர்ப்பு நூலுக்காக, 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார். முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதை நூல்களையும் தமிழ் அழகியல், நவீன ஓவியம் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். பாடப்பகுதிக்கான கவிதை மIொழிபெயர்ப்புகள் வால்ட் விட்மன் - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சங்கர் ஜெயராமன் மல்லார்மே - பிரெஞ்சு மIொழியிலிருந்து தமிழில் : வெ.

ஸ்ரீராம் பாப்லோ நெரூடா - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ஆ.இரா. வேங்கடாசலபதி நூல்வெளி ஒவ்வொரு மIொழியிலும் தோன்றும் கவித்துவ வெளிப்பாடுகளை ஒன்றாக வைத்து நோக்கும்பொழுது கவிதைகள் கேட்போரால் / வாசகர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பெறும் முறையில், காலத்துக்குக் காலம் அழுத்த வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம். கவிதை என்பது யாது; அது எவற்றைப் பற்றிப் பேசுதல் வேண்டும்; எப்பொழுது எந்த நிலையில் ஒரு கவிதையாக்கம் கவர்ச்சிகரமான கவிதையாக அமையும் என்பன பற்றி, அவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோருடைய கருத்து நிலைப்பாடுகள் கவிதை, கவிதையெனக் கொள்ளப்படுவதற்கான எடுத்துக்கூறல் முறைமைகள் ஆகியன யாவும் ஒருங்கு சேர்கின்றபொழுதுதான் மேலே கூறிய கவித்துவ உணர்வுச் செவ்வியலிலே மாற்றம்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →