கண்ணீர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர் ஆவென்று கதறினாள்! ‘அன்பு செய்தோர் படிமீது வாழாரோ?’ என்று சொல்லிப் பதைபதைத்தா ள்! இதுகேட்ட தேச மக்கள் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக் கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்!
செல்வமும் உரிமையும் மக்களுக்கே கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்! காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்; ‘புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று போய்உரைப்பாய்’ என்றார்கள்! போகா முன்பே செவியினிலே ஏறிற்றுப் போன ன் வேந்தன்! செல்வமெலாம் உரிமைஎலாம் நாட்டா ருக்கே நவைஇன்றி எய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலம்எல்லாம் வாய்ந்த தங்கே! சொல்லும் பொருளும் ஓதுக – சொல்க; முழக்கம் – ஓங்கி உரைத்தல்; கனிகள் – உலோகங்கள்; மணி - மாணிக்கம்; படிகம் – பளபளப்பா ன கல்; படி - உலகம்; மீட்சி – விடுதலை; நவை – குற்றம். இலக்கணக் குறிப்பு ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்; அலைகடல் – வினைத்தொகை; தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பேரன்பு, நெடுங்குன்று – பண்புத்தொகைகள்.
ஒழிதல் – தொழிற்பெயர்; உழுதுழுது – அடுக்குத்தொடர். பகுபத உறுப்பிலக்கணம் நின்றார் – நில்(ன்) + ற் + ஆர் நில் – பகுதி (‘ல்’ ‘ன்’ ஆனது விகாரம்), ற் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி. செய்வான் – செய்+வ்+ஆன் செய் – பகுதி, வ் –எதிர்கால இடைநிலை, ஆன் –ஆண்பால் வினைமுற்று விகுதி. அழைத்தான் – அழை + த் + த் + ஆன் அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
வேண்டுகின்றேன் – வேண்டு + கின்று + ஏன் வேண்டு – பகுதி, கின்று –நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. ஆழ்க – ஆழ் + க ஆழ் – பகுதி, க – வியங்கோள் வினைமுற்று விகுதி. பறித்தார் – பறி + த் + த் + ஆர் பறி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி. புணர்ச்சி விதி நீரKோடை – நீர் + ஓடை உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - நீரKோடை சிற்றூர் – சிறுமை+ ஊர், ஈறு போதல் சிறு + ஊர் தன னொற்றிரட்டல் – சிற்று + ஊர் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – சிற்ற் + ஊர் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – சிற்றூர் கற்பிளந்து – கல் + பிளந்து ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும் – கற்பிளந்து XI Std Tamil மணிக்குலம் – மணி + குலம் இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - மணிக்குலம் அமுதென்று – அமுது + என்று உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் – அமுத் + என்று உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – அமுதென்று புவியாட்சி – புவி + ஆட்சி இ ஈ ஐ வழி யவ்வும் – புவி + ய் + ஆட்சி உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது