புரட்சிக்கவி XI Std Tamil இவர்களின் விருப்பம் அரசனுக்குத் தெரியவருகிறது. இதனை விரும்பாத அரசன், உதாரனைக் குற்றவாளியாக்கி மரண தண்டனை விதிக்கிறான். அமுதவல்லி அதை எதிர்க்கிறாள். அதனால், சினம்கொண்ட மன்னன் இருவருக்கும் சேர்த்தே மரண தண்டனை விதிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து வரும் இக்காவியத்தின் இறுதிப்பகுதி இங்குப் பாடமாக இடம்பெற்றுள்ளது. பா வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உயிர் எமக்கு வெல்லமல்ல ‘காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டும் கன்னிஎனை மன்னிக்கக் கேட்டுக்கொண்ட நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால் நிலைத்திடும்என் உயிர்எனவும் நினைத்து விட்டாய்! சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும், தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்; ஓதுகஇவ் விரண்டில் ஒன்று மன்னவன்வாய்!
உயிர் எமக்கு வெல்லமல்ல!’ என்றாள் மங்கை. கடைசிப் பேச்சு கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள் கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்; அலைகடல்போ ல் நாட்டார்கள் வீடு பூட்டி அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும் சிலைக்குநிகர் மங்கைக்கும் ‘கடைசி யாகச் சிலபேச்சுப் பேசிடுக’ என்றுசொல்லித் தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்; தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கம் செய்வான்; பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என் பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்! நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள் நிறைந்துபெருங் காடாகப், பெருவி லங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின் நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார்?
அழகு நகர்உண் டாக்கி! சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப்ப டுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
* ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் அரசனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண் டாக அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான் சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும் சாவதென்றே தீர்ப்பளித்தான்; சாக வந்தோம்! ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! இருவர் இதோ சாகின்றோம்!
நாளை நீங்கள் இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின் றீர்கள்! மாசில்லாத உயர் தமிழ் ‘தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ!
என் தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ? உமைஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்! மக்களுக்கே ஆளும் உரிமை அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணை க் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ? அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான் சிரம் அறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும் சிறியகதை!
நமக்கெல்லாம் உயிரின் வாதை! அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம் ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்! XI Std Tamil ஆழ்க எந்தன் குருதி வாழியஎன் நன்னாடு பொன்னா டாக! வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்! என் பெரியீர், அன்னையீர், ஏகு கின்றேன்! ஆழ்க என்றன் குருதியெலாம் அன்பு நாட்டில் ஆழ்க’ என்றான்! தலை குனிந்தான் கத்தி யின்கீழ்!
க>ொலையாளி உயிர் தப்பல் படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து பார்ப்பதுபோல் அமுதவல்லி