புறநானூறு XI Std Tamil கற்பவை கற்றபின்... வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வ ரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள்; உலகம் முழுவதும் கிடைப்பதாயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார்; எதற்கும் மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையJோர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையை ச் சார்ந்தது.
இலக்கணக்குறிப்பு அம்ம - அசைநிலை; உண்டல், துஞ்சல் - தொழிற்பெயர்கள்; முயலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பகுபத உறுப்பிலக்கணம் துஞ்சல் - துஞ்சு + அல் துஞ்சு - பகுதி, அல் - தொழிற்பெயர் விகுதி முனிவிலர் - முனி + வ் + இல் + அர் முனி - பகுதி, வ் - உடம்படுமெய் சந்தி இல் - எதிர்மறை இடைநிலை அர் - பல ர்பால் வினைமுற்று விகுதி புணர்ச்சி விதி இயைவதாயினும் - இயைவது + ஆயினும் உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - இயைவத் + ஆயினும். உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - இயைவதாயினும். புகழெனின் - புகழ் + எனின் உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - புகழெனின். .
உலகியல் கருத்துகளைப் பேசும் ஏதேனும் ஓர் இலக்கியப் பாடலின் நயமும் சொல்லும் பொருளும் குறித்து வகுப்பில் பேசுக. . உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் கேள்வியுற்ற “பிறர்க்கென முயலுநர்” எவரேனும் ஒருவர் குறித்த தகவல்களைத் திரட்டிக் கட்டுரை உருவாக்குக. புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
புறத்திணை சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது; புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்; அகவற்பாக்களால் ஆனது. புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி: பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்கால த்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர்.
கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமை யால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன. நூல்வெளி சுவடிகளில் எழுதிப் பயன்படுத்தப்பட்டு அழிந்துபோகும் நிலையில் இருந்த புறநானூற்றின் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து பயன்பெறும் வகையில், உ.வே.சா. ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.
பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE L. HART) என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப் (G.
U. POPE), புறநானூற்றுப்பாடல்கள் சிலவற்றை “Extracts from purananooru & Purapporul venbamalai” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். XI Std Tamil வாடிபுரம் காளை! வாடிவாசலையும் தொழுவத்தையும் பிரித்து நிற்கும் ஆள் உயர வேலி அடைப்பின்மீது உட்கார்ந்து இருந்த ஒரு பைய ன் கத்தினான்.
“வாடிபுரம் காளை!” “கருப்புப் பிசாசு!” கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில வினாடிகளில் வாடிவாசலிலே முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரிக்கொ ம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வ தென்று தவித்து அவனவன் அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான்.
திட்டிவாசலைச் சுற்றிக் குழப்பமின்றி விஸ்தாரமாக இருந்தது. அதிலேயும் இரண்டொருத்தன்தான் துணிந்து நின்று காளை உள்ளே அவிழ்க்கப்படுவதைப் பார்த்தான். தொழுவத்தில் அதன் அலங்காரங்கள் கல க்கப்பட்டு உள்வாடிக்குக் கொ ணரப்பட்ட காளை ஒரு தடவை முக்காரமிட்டுவிட்டு ஒரு சிறுவன் ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கும் விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் வாடிவாசல். அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது.
எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும். மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டன்று. அதுதான் ஜல்லிக்கட்டு.