📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 216question

தாகூரின் கடிதங்கள்

Chapter 2: Front Matter · Tamil

தாகூரின் கடிதங்கள் XI Std Tamil வழியிலும் வழிமுடிவிலும் , செப்டம்பர் மரத்தின் கிளையில் பூ மலர்கிறது. அதற்குப் புகலிடம் அதுதான். ஆனால், மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தினுள் இடம் அளிக்கின்றான். நமது நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன.

மனிதன் அவை அனைத்தையும் மனத்தினுள் ஏற்றுக்கொள்ளவில்லை. மலரிடம் இவ்வளவு அலட்சிய மனப்பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை. அதற்குப் பெயர் இருக்கலாம். ஆனால், அது தெரியாததாக இருக்கும்.

சில மலர்கள் தங்கள் இன்மணத்தின் வலிமையால் புகழ்பெற்றுவிட்டன. அதாவது அலட்சியமாக அவற்றைப் பாராமல் சென்றாலுங்கூட அவை தாமாக முன் வந்து மணத்தினால் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. நமது இலக்கியங்களில் அவை தவறாமல் அழைப்பைப் பெறுகின்றன. அவற்றுள் பல மலர்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம்.

அவைகளைக் கண்டதுமில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ளும் முயற்சியையும் நாம் எடுத்துக்கொள்ளவில்லை. பெயரகராதியில் ஜுதீ, ஜாதீ என்றெல்லாம் படிக்கின்றோம். யாப்பு சரிவர அமைந்துவிட்டால் நாம் களிப்பெய்துகின்றோம்.

ஆனால் ‘ஜாதி’ என்பது எது, ‘ஜுதி’ என்பது எது என்றெல்லாம் ஆராய நமக்கு ஆவல் பிறப்பதில்லை. பலவாறு முயற்சி செய்தபின் ‘ஜாதீ’ என்பது முல்லை வகையில் ஒரு பூ (சமேலி) என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், ‘ஸேவுந்தி’ என்பது எந்த மலரின் பெயர் என்பது இன்றுவரையிலும் பலரைக் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. சாந்திநிகேதனத்தில் ஒரு மரம் இருக்கிறது.

அதனைப் ‘பியால’ என்று அழைக்கிறார்கள். ஆனால், ஸம்ஸ்கிருத காவியங்களில் புகழ்பெற்ற அந்த மரத்தைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ! இன்னொரு விஷயத்தைப் பாருங்கள். ஆறுகள் விஷயத்தில் நமது உள்ளத்தில் இந்த அலட்சியம் இல்லை.

மிகவும் சிறிய ஆறுகூட நமது மனத்தில் பிடித்தமாக இடம் பெற்றுள்ளது. புறாக்கண்ணி (கபோதாக்ஷி), மயில் விழியாள் (மயூராக்ஷி), விருப்புடையவள் (இச்சாமதி) என்றெல்லாம்! அவை அன்றாடம் நமக்கு உபயோகப்படுகின்றன. பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அறிமுக அவசியம் எதுவும் இல்லை.

நாகரிக வழக்கத்தில் காலத்துக்கேற்றபடி சீக்கிரமே வாடிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரனுடைய கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச் செப்பினுள் வழக்கம்போல் போவ தும் வருவதும்தான் அவற்றின் வேலை. இதைத்தான் தாமஸிகம் அதாவது ‘மெடீரியலிஸம்’ என்கின்றோம்.

ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகிறது. இது போன்ற பெயரில்லா மலர்களின் நாட்டில் கவிஞரின் நிலை எவ்வளவு மோசமானது என்பதை யோசித்துப் பார். மலர்களின் ராஜ்யத்தில் அவனுடைய பேனாவின் நடமாட்டம் எத்துணைக் குறுகியது! பறவைகள் விஷயத்திலும் இதேமாதிரிதான்.

காகம், குயில், மைனா, ‘பௌ-கதா-கவோ’ (இந்தச் சொற்களைப்போல் குரல் பயிற்றும் ஒரு புறா இனம்.) இவைகளை எப்படி விட்டுவிட முடியும்? ஆனால், எத்தனையோ நேர்த்தியான புட்கள் உள்ளன. அவைகளின் பெயர் அநேகமாகச் சாதாரண ஜனங்களுக்குத் தெரிந்திருக்கா. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூல காரணம்.

இந்தச் சுபாவம் காரணமாகத்தான் நாட்டு மக்களிடமும் நமது அலட்சிய மனப்பான்மை தீவிரமாகத் தலைதூக்குகிறது. XI Std Tamil பரீட்சையில் தேறவேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது. நமது தேசப்பற்று அந்தப் புத்தக மூட்டையால் உருவானது. தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலின் காரணமாக உண்டானதல்ல.

நமது உலகம் எத்துணை குறுகலானது என்பதை யோசித்துப் பார். அதிலிருந்து எத்தனை பொருள்கள் இடம் பெறவில்லை என்பதையும் நினைத்துப் பார். (வழியிலும் வழிமுடிவிலும் – ஆம் கடிதம்)

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →