தமிழரின் உலகப் பரவல் சுரினாம்பிரெஞ்சு கயானா சவுதி அரேபியா தான்சானியா ரி யூனியன் சீஷெல்ஸ் தீவுகள் மாலத் தீவுகள் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா XI Std Tamil தனிமகனா ர் , சினம் கொண ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ் வோர் போ கிய பேர் ஊர்ப் பா ழ்’ என்கிறார். ஆண்டுகளுக்கு முன்னர் அரசரின் கொல ச் சீற்றத்திற்குப் பயந்து வெளியேறியவர்கள் போலத்தான் சமீப காலங்களில் புகலிடம் தேடி அலைந்து கரை சேர்ந்தவர்களையும் சொல்லலாம். கனடாவுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏதோ ஒரு தொட ர்பு உண்டு. திருக்குறளையும் திருவாச கத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.
யு. போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர். தமிழ் அகதிகள் கனடாவுக்குக் குடிபெயரத் தொட ங்கியது ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான். அவர்கள் குடியேறிய சில வருடங்க ளிலேயே இதழ்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.
அகதிக் கோரிக்கை இன்னும் வெற்றி பெறவில்லை. நிரந்தர வேலை கிடையாது. அடுத்த வேளை உணவு பற்றி நிச்சயமில்லை. ஆனால் பத்திரிகைகளும் இலக்கிய இதழ்களும் தொடங்க அவர்கள் தயங்கவில்லை.
புது நாட்டுக்கு வந்தவுடன் அவர்கள் செய்தது புது வாழ்க்கையைப் பதிவு செய்ததுதான். ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதுகிறார், “யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்க்பர்ட்டில் ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில் நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல் ஓஸ்லோவில்” கவிதைகள் எழுத முடியாத வர்கள் அவர்கள் சேர்த்துவைத்த நூல்களைச் சுமந்துகொண்டு வர மறக்கவில்லை. ஒருவர் சாண்டில்யனின் கடல்புறாவை வருட கால மாகத் தூக்கிக் கொண்டு நாடு நாடாக அலைந்ததாகச் சொன்னார்.
இதற்கெல்லாம் காரண ம் இருந்தது. 1981ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியைத் தமிழர் எவர் ஒருவராலும் மறக்க இயலாது. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்.
'ஃபாரன் ஹீட் ' நூல் அதைத்தான் சொல்கிறது. அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான். உலக அரங்கில் தமிழ் புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, தமிழைக் கைவிட்டுவிடும் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டது.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்க முனையும் மாண வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. இவர்களில் சிலராவது உயர்ந்த இலக்கியங்கள் படை த்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள். தமிழர்கள் எட்டுக் கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்க ள்.
நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை பரந்துபோய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்க ள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கணக்கெடுப்புச் சொல்கிறது. ஒரு கால த்தில் பிரித்தானிய அரசைச் சூரியன் மறையாத அரசு என்று அழைத்தார்க ள். இப்போதோ சூரியன் மறையாத தமிழ்ப்புலம் என்று சொல்கிறார்கள்.
ஆம் ஆண்டு தொட ங்கி வரும் எல்லா வருடங்க ளிலும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம பரிய நாள் எனப் பிரகடன ப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் உலகத்தில் இரண்டாவது பெரிய தேசமான XI Std Tamil