📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 44poem

ஏதிலிக்குருவிகள்

Chapter 2: Front Matter · Tamil

ஏதிலிக்குருவிகள் XI Std Tamil கற்பவை கற்றபின் . பிரமிளின் கவிதைத் தொகுப்பிலிருந்து உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் காட்சிப்படுத்துக. . பறவை பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றைத் தொகுத்துக் கையேடாக்குக. நூல்வெளி பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம், இலங்கையில் பிறந்தவர். இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைபெயர்களில் எழுதியவர். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர். ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →