என்னுயிர் என்பேன் XI Std Tamil மIொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வள ர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது. ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மIொழியே. அது, நம் இருப்பின் அடையாளம். நம் தாய்மொழியாம் தமிழ் மIொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றையகாலம் வரையும் இடர் பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது. . என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே! வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே! உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு . பாடத்தான் வேண்டும்! காற்றிலேறிக் கனைகடலை, நெருப்பாற்றை, மலை முகடுகளைக் கடந்து செல் எனச் செல்லுமோர் பாடலை கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின் உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும்! * ஏடு தொடக்கி வைத்து என்னம்மை மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல்முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோர் பாடலை. * சு. வில்வரத்தினம்
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 13poem
என்னுயிர் என்பேன்
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →