📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 162question

காலத்தை வென்ற கலை

Chapter 2: Front Matter · Tamil

காலத்தை வென்ற கலை XI Std Tamil புதிய குரல்: “தம்பி, நீங்கள் கோபுரமென்றது தவறு. இந்தப் பெண் சொன்னதுதான் சரி”. (குரல் வந்த திசையில் பார்த்தபோது அவர்களுக்குப் பின்னால் தூணில் தூய வெண்ணிற ஆடையில் அறிவின் களையுடனும் சோர்ந்த முகத்துடனும் வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.) பெரியவர்: கோபுரமென்பது வாயில்களின் மேலே அமைக்கப்படுவது. விமானமோ, ‘அகநாழிகை’ யின்மேல் அமைக்கப்படுவது.

கதிர்: அகநாழிகையா? பெரியவர் : கருவறையைத்தான் அகநாழிகை என்று அழைப்பார்கள். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது பிற்காலச் சோழர்களின் தனிச்சிறப்பு.

நிலா: இதை ஏன் பெரிய கோவில் என்று அழைக்கிறார்கள் ஐயா? பெரியவர்: (குறு நகையுடன்) தஞ்சைப் பெரிய கோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும் அம்மா. இராசராச சோழனால் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று இது கட்டி முடிக்கப்பட்டது. ‘தட்சிண மேரு’ என்று இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட இக்கோவில் விமானம் அடி உயரம் உடையது.

கருவறை விமானம் தளங்களையுடையது. கதிர்: கற்றளிக் கோயில்களென்றால்….. பெரியவர்: செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் கற்றளி என்று பெயர். ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் உருவாக்கிய வடிவம் இது.

மகாபலிபுரம் கடற்கர க் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில் ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்த வகையில் முழுமையாகக் கற்களைக்கொண்டே கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில் இதுதான். நிலா: பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன ஐயா? பெரியவர்: தEொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டனர்.

தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில் ஆகியன அவ்வாறு கட்டப்பட்டவை. அதன்மேல் செப்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தார்கள். அடுத்த நிலையில் செங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டினார்கள். அந்த வகையில் 11ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை 1003ஆம் ஆண்டு தொடங்கி 1010ஆம் ஆண்டுவரை கட்டினான்.

2010இல் இக்கோவிலின் ஆவது ஆண்டு நிறைவடைந்தது. தஞ்சைப் பெரிய கோவில் - குறுக்கு வெட்டுத் தோற்றம். XI Std Tamil சோழன் செங்கணான் எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியிருப்பதாகத் திருநாவுக்கரசர் தம் பதிகமொன்றில் கூறுகிறார். நிலா: கோவில்கள் ஏன் பெரிதாகக் கட்டப்பட்டன?

பெரியவர்: கோவில் என்பது வெறும் வழிபடும் தலம் மட்டுமன்று. அங்கே இசை, நடனம், நாடகம் போன்ற அருங்கலைகள் வளர்க்கப்பட்டன. அது, மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருந்தது. எனவே, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்துமே அங்கே கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கான தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்தன. கருவூலமாகவும் மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கக்கூடிய இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன என்றால் நீங்கள் வியப்படைவீர்கள். கதிர்: சரிதான், பல்லவர்கள்தாம் கோவில் கட்டுவதில் வல்லவர்கள் என்று நினைத்திருந்தேன். பெரியவர்: செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு ’விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரைக் கோவில்களை அமைத்ததாக மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

அவர்கள்வழி வந்த இராசசிம்மனோ தம் முன் னோர்களையும் விஞ்சும் வகையில் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை அமைத்து அழியாப் புகழ் பெற்றான். நிலா:

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →