📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 178question

கலைச்சொல்லாக்கம்

Chapter 2: Front Matter · Tamil

கலைச்சொல்லாக்கம் XI Std Tamil மருத்துவம், பொறியியல், தகவல் தEொடர்பியல் முதலான துறைசார்ந்த கலைச்சொற்கள் இன்றைய அறிவியல் சூழலுக்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க்கனல்: அவ்வாறான கலைச்சொற்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்… செழியன்: மருத்துவமனை ( C L I N I C ) , குருதிப்பிரிவு (BLOOD GROUP), மருந்தாளுநர் ( P H A R M A C I S T ) , ஊடுகதிர் ( X - R A Y ) , குடற்காய்ச்சல் ( T Y P H O I D ) , களிம்பு ( O I N T M E N T ) முதலியவை மருத்துவக் கலைச்சொற்கள்; எழுதுசுவடி (NOTE BOOK), விடைச்சுவடி (ANSWER BOOK) பொதுக் குறிப்புச் சுவடி (ROUGH NOTE BOOK), விளக்கச்சுவடி (PROSPECTUS) போன்றவை கல்வி சார்ந்த கலைச்சொற்கள். இவ்வாறு துறை சார்ந்த கலைச்சொற்கள் இலட்சக் கணக்கில் தமிழில் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள புதிய கலைச்சொற்களைத் தEொகுத்து அகரவரிசைப்படுத்திக் கலைச்சொல் அகராதிகள் வெளியிடப்படுகின்றன.

முத்து: கலைச்சொல்லாக்கப் பணியின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எவையேனும் உள்ளனவா? செழியன்: தமிழில் கலைச்சொல்லாக்கப் பணி தEொடங்குவதற்குமுன் நாம் பின்வரும் விதிமுறைகள் சிலவற்றைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். ஆக்கப்பெறும் சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும். பொருள் பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.

வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும். ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும். தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும். நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக்கூடாது.

தமிழ்க்கனல்: கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும்? செழியன்: நாள்தோ றும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கான கலைச்சொல் ஆக்கங்களும் நிகழ்ந்துகொண்டே உள்ளன. பெரும்பாலும் அவை ஏட்டளவில் இருக்கின்றன. அக்கலைச் சொற்களை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும்.

எடுத்துக்காட்டாக, இ-மெயில், ஸ்மார்ட்ஃபோன், விண்டோஸ் , 8G ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக மின்னஞ்சல், திறன்பேசி, பலகணி , 8ஆம் தலைமுறை போன்ற கலைச்சொற்கள் தமிழில் உள்ளன. இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைநிற்க வேண்டும். முத்து: புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலைச்சொற்களை எங்கிருந்து பெறலாம்? செழியன்: இதழ்கள், மின்இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளம் போன்றவற்றிலிருந்து பெறமுடியும்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் இருபதிற்கும் மேற்பட்ட துறைகளுக்குக் கலைச்சொற்களை வெளியிட்டுள்ளது. பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழில் கலைச்சொற்களுக்கெனத் தனியிடம் ஒதுக்கி, மாணவர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். தமிழ்க்கனல்: கலைச்சொற்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துங்கள் ஐயா…. செழியன்: அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க்கலைச்சொற்கள், Smartphone திறன்பேசி Touch screen தொடுதிரை Bug பிழை Gazette அரசிதழ் Despatch அனுப்புகை Subsidy நல்கை Ceiling உச்சவரம்பு Circular சுற்றறிக்கை XI Std Tamil மேலும், இவை போன்ற பலதுறைச் சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

முத்து : தமிழில் கலைச்சொற்களின் இன்றியமையாமையைக் கூறுங்கள்… செழியன்: உலகின் தE ன்மையான மொழிகளுள் இன்றும் நிலைத்து நிற்கின்ற மொழி, தமிழ்மொழி. காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழியே வாழும். மருத்துவம், பொறியியல், தEொழில்நுட்ப அறிவியல் ஆகியவற்றைத் தமிழ்வழியில் பயில, கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாக உள்ளது. தாய்மொழி வழியிலான சிந்தனை மட்டுமே புதிது புதிதான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →