📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 192question

காற்றில் கலந்த பேரோசை

Chapter 2: Front Matter · Tamil

காற்றில் கலந்த பேரோசை XI Std Tamil தான் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் அதன் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய திறமையால், கலை நோக்கால், கற்பனையால், உயிர்பெறச் செய்து, மனிதன்முன் படைத்த வர். மின்சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர் அவர். அவருடைய வாழ்வை, அதன் மையமான போக்கை எண்ணிப் பார்க்கையில், ஒரு கனவு, சிறு பிராயத்திலிருந்தே நெஞ்சோடு வளர்ந்த ஒரு கனவு, அவருக்கு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. மனித வெள்ளத்தை அவர்களில் ஒருவனாய் முன்னின்று தலைமை தாங்கி இட்டுச் சென்று, அதிஉன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அது.

க>ொள்கையும் நம்பிக்கையும் ‘மனிதச் சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே. செய்துகாட்டுகிறேன்.

என்னைப் பயன்படுத்திக் கொள். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக் கொள். கைமாறு வேண்டாம். என்னை நீ பயன்படுத்திக்கொள்வதே நீ எனக்குத் தரும் கைமாறு’.

இதுவே அவருடைய பிரார்த்தனை. இந்த அடிப்படையான மனோபாவத்திலிருந்து பிறந்தது அவருடைய கொள்கை; அவருடைய நம்பிக்கை. பேச்சு நடை பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும், பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும்.

பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றைக் காலடியில்போட்டு மிதித்தவர். அவருடைய பாணி இரவல்பாணி அல்ல; கற்று அறிந்ததும் அல்ல. நம் நாட்டு மக்களின் தரத்தையும் அனுபவ அறிவையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு மனிதன், விஷயத்தைக் கலைநோக்கோடு அணுகிக் கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுப்பாணி அது.

அதோடு, உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணவேண்டும் என்பதில் ஜீவாவுக்கு நிர்ப்பந்தமுண்டு. இந்தத் தேசத்தில் பேச்சு, அதற்குரிய பயனைத் தர வேண்டுமென்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். இரண்டு கைப்பிடி விசயம் விசயத்தை வண்டி வண்டியாகக் குவித்துச் சின்ன மூளைகளைக் குழப்பி வாதனைக்கு உள்ளாக்குவது பல பிரசங்கிகளுக்குப் பொழுதுபோக்கு. ஜீவா இதற்கு எதிரி.

ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரியவைத்துவிட்டால் போதும் என்பதே அவருடைய எண்ணம். வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல் இரண்டு கைப்பிடி விசயம்தான் எடுத்துக்கொள்வார். மேடைமீது ஏறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதிலிருந்து வர்ணஜாலங்கள் தோன்றும்; பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும்; குடை குடையாய் இறங்கி வரும்; மாலை மாலையாய் இறங்கி வரும். XI Std Tamil பசுமையான எண்ணங்கள் பேச்சுக்கலை அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.

இப்போது மேடையில் ஒரு நாற்காலி காலியாகிவிட்டது. அது என்றும் காலியாகவே கிடக்கும். ‘ நான் ஒரு பள்ளி மாணவன், படித்துக் கொண்டிருக்கிறேன், படித்துக் கொண்டே இருப்பேன்’ என்ற எண்ணம் எப்போ தும் அவர் மனசில் பசுமையாக இருந்தது போலிருக்கிறது. அவர் கரைத்துக் குடித்துவிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும் அதையும் காது கொடுத்துக் கேட்பார்.

தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை எப்போதும் அவர் நினைவில் நிற்கும். ஆற்றில் விழுந்த கிளை ஆற்றில் ஒரு கிளையைப் போடுகிறோம். அது ஆற்றோடு செல்கிறது. நீரோட்டத்தில் சிக்கிக் கனவேகமாக

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →