📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 21question

கவிதைப்பேழை

Chapter 2: Front Matter · Tamil

கவிதைப்பேழை XI Std Tamil பாயிரம் - அறிமுகம் நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறைபற்றிப் பேசுவது பாயிரமாகும். ச@ொல்லும் பொருளும் பால் – வகை ; இயல்பு – இலக்கணம்; மாடம் – மாளிகை; அமை – மூங்கில். பாடலின் பொருள் . பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள் அ) முகவுரை - நூலுக்குமுன் சொல்லப்படுவது.

ஆ) பதிகம் - ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பல வகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது. இ) அணிந்துரை ஈ) புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது. உ) நூன்முகம் - நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது. ஊ) புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.

எ) தந்துரை - நூலில் சொல்லிய பொ ருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது. . பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும். .

நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாண வர் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம். . சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் நூலாசிரியர் பெயர் நூல் பின்பற்றிய வழி நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு நூலின் பெயர் தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு நூலில் குறிப்பிடப்படும் கருத்து நூலைக் கேட்போர் (மாண வர்) நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும். இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.

. நூல் இயற்றப்பட்ட கால ம், அது அரங்கேற்றப்பட்ட அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரண ம் என்னும் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர். . ஆயிரம் முகத்தைப் பெற்றது போன் று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.

நன்னூல் முதல் பதிப்பு ( ) முகப்புப் பக்கம் XI Std Tamil இலக்கணக்குறிப்பு காட்டல், கோடல் - தொழிற்பெயர்கள் ஐந்தும் - முற்றும்மை கேட்போர் - வினையாலணையும் பெயர் மாநகர் - உரிச்சொற்றொடர் பகுபத உறுப்பிலக்கணம் வைத்தார் - வை + த் + த் + ஆர் வை - பகுதி த் - சந்தி த் - இறந்தகால இடைநிலை ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி. நன்னூல், தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும். இது, பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என பகுதிகளாகவும் சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என பகுதிகளாகவும் அமைந்துள்ளன. சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது. ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது.

இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது. நூல்வெளி எல்லாவகை நூல்களுக்கும் அழகு தருவதாக வைக்கப்படுவது அணிந்துரை – எடுத்துக்காட்டுகளுடன் வகுப்பறையில் விவாதிக்க. கற்பவை கற்றபின்...

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →