📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 202question

சிந்தனைப் பட்டிமன்றம் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

கம்பீரமாக நடைபோடுவதற்கு நாடல்லவா கற்றுக் கொடுத்தது? ஊராட்சி மன்றங்களையும் சட்ட மன்றங்களையும் பார்த்த பின்தானே பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே உணரத் தொடங்கினார்கள். எனவே, நடுவர் அவர்களே நாடுதான் நம்பிக்கையோடு இளைஞர்களை வழிநடத்துகிறது. எதிர்காலத்தை வளமாக்கத் துணைபுரிகிறது.

எனவே, இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது நாடே! என்ற தீர்ப்பினை வழங்குமாறு கேட்டு நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம். நடுவர்: அன்புத்தோழி அமுதாவின் கருத்து மழையில் எல்லோருமே கரைந்து நெகிழ்ந்து போனோ ம்.

இரண்டு அணிகளும் மிகச் சிறப்பாகத் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கின்றன. இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? இந்தத் தலைப்பு ஆழமான கேள்வியை XI Std Tamil முன்வைக்கிறது.

’நல்லதொரு குடும்பம் பல்கல க் கழகம்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ’வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும்’ என்று அறிஞர் அண்ணா கூறினார். எத்தனை பேர் அதைச் செய்தோம்? பிறகெப்படி வீடு பல்கல க்கழகமாக மாறும்?

வீடு என்பது இளைஞர்களின் குழந்தைப் பருவத்தை எப்படிக் கட்டமைக்கிறது? பெற றோரையும் உறவினரையும் எப்படி அறிமுகப்படுத்துகிறது? அமுதா சொன்னதைப்போல மரபார்ந்த பார்வையுடன் பெண்களுக்கான உரிமை உணர்வை வீடு மதிக்கிறதா? பாச உணர்ச்சியை வளர்த்தெடுக்கிறது.

ஆனால், பரந்து விரிந்த பகுத்தறிவை வீடு தருகிறதா? ஆனால், வீட்டைத் தாண்டி நாட்டுக்குள் வந்தால்தான் சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மேன்மையான பார்வையைப் பெறுகின்றோம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோ, “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!” என்று உலகத்தையே வீடாகக் காட்டுகிறார். வீடு என்பது நாட்டின் ஓர் அலகு மட்டுமே.

நம் அனைத்து அறிவுத் தேவைகளையும் அது தந்துவிடுமா என்று நாம் சிந்திக்கவேண்டும். நாடு என்பது பன்முக ஆளுமை உடையது. நாடு, எத்தனை வகையான கல்விக் கூடங்களைத் தருகிறது? கல்வியில் எத்தனை வகையான படிப்புகள் இருக்கின்றன?

நமக்கான மேற்படிப்பை எப்படித் தேர்வு செய்வது? எந்த வகையான வேலை வாய்ப்புக்குச் செல்வது? என்று இந்தத் தேடுதல்களுக்கான வாசல்களை இளைஞர்களுக்காகத் திறந்து வைத்திருக்கிறது. ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த கருத்துகள் ஆகிய எல்லாவற்றையும் வழங்கி முழுமையான முன்னேற்றத்திற்குப் பெரிதும் வழிகாட்டுவது நாடே!

நாடே! என்று எனது தீர்ப்பினைக் கூறி, “செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!” என்று பாடிய மகாகவி பாரதியின் அடிகளைச் சிந்தனையில் ஏந்திப் பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்! கற்பவை கற்றபின்...

பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம். அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம். வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம். “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

தெரியுமா? மனித வாழ்வை உயர்த்துவதற்குப் பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.

XI Std Tamil உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. முன்னோர்கள் சில பொ ருள்களுக்குக் காரணம் கருதியும் சில பொருள்களுக்குக் காரணமின்றியும் பெயர் வைத்தனர். இலை, மண், கல், நாற்காலி, காற்றாடி எனப் பெயர்களை நினைவில் கொண்டுவரும்போது இவற்றுள் காரணத்தோடு வரும் பெயர்களை

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →