📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 202question

சிந்தனைப் பட்டிமன்றம்

Chapter 2: Front Matter · Tamil

சிந்தனைப் பட்டிமன்றம் XI Std Tamil என்று இளைஞர்களைப் பார்த்துப் பாடினார். அறிவியல் யுகத்தைத் தாங்கும் தூண்களாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு வீடும் நாடும் துணைபுரிகிறதா? இந்தக் கேள்விக்கு விடை தேட முனைகிறது இந்தச் சிந்தனைப் பட்டிமன்றம். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடே!

என்று நண்பர் எழிலைப் பேச அழைத்து என் தொடக்கவுரையை முடிக்கின்றேன். வணக்கம். எழில்: பட்டிமன்றங்கள் பல வும் இன்று நீர்த்துப்போய்விட்ட காலகட்டத்தில் சிறப்பான ஒரு தலைப்பைத் தந்து சிந்தனைக் களமாக மாற்றியிருக்கின்ற தமிழாசிரியர் தங்கமணி அம்மா அவர்களே! நல்ல தீர்ப்பைத் தரவிருக்கின்ற நடுவர் அவர்களே!

நண்பர்களே! வணக்கம். இளைஞர்களின் முன்னேற்றப் பாதையில் முதல் படிக்கல்லாகவும் அவர்கள் கொடுமுடியைத் தொடுவதற்கு அடித்தளமாகவும் விளங்குவது இல்லம்தானே. அன்பையும் அறிவையும் உணர்த்தும் உரைகல்லாக வீடல்லவா விளங்குகிறது.

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் முகம்தானே முதல் பாடப்புத்தகம். குழந்தைகளுக்கு உலகத்தைத் தாய்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்துகிறார். ‘ தங்கமக பூம்பா தம், தண்ணிபட்டா கொப்பளிக்கும்’ என்று அன்பு காட்டிப் பிள்ளையை வளர்த்து, வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் உணரவைக்கின்றார். சொல்லப்போனால் ‘கற்றல்’ என்பதே வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

தந்தையோ அதைத் தொடர்கிறார். அடித்தளம் பல மாக இருந்தால்தானே கட்டடம் வலிமையாக அமையும். எனவே, அடித்தளம் வீட்டுச்சூழல். அதன்மீதுதான் நமது வெற்றி கட்டி எழுப்பப்படுகிறது.

நடுவர் எடுத்தாண்ட கவிஞாயிறு தாராபாரதியின் கவிதையை நானும் துணைக்கு அழைக்கிறேன். “எத்தனை உயரம் இமயமலை – அதில் இன்னொரு சிகரம் உனது தலை ! எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ இவர்களை விஞ்சிட என்ன தடை?” என்று முழங்கிய கவிஞரின் வழியில் நான் முன்னேற வீடுதான் என்னைத் தாங்குகிறது. ஆகவே, நடுவர் அவர்களே!

இளையோர் முன்னேற்றத்தின் முகமும் அகமுமாக அமைவது வீடே! என்று தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம். நடுவர்: நான் எதிர்பார்க்கவே இல்லை.

நல்ல தொடக்கத்தை நிகழ்த்திவிட்டார் எழில். மிகச் சிறப்பாகப் பேசி அமர்ந்திருக்கும் எழிலின் கருத்தை மறுத்துப் பேச வருகிறார் நண்பர் அப்துல்லா. வாருங்கள், உங்களுக்காகக் கரவொலி காத்திருக்கின்றது. அப்துல்லா: மழை பெய்கிறபோது எல்லோரும் வெளியில் இருந்து வீட்டுக்குள் ஓடுவோம்.

ஆனால், எட்டயபுரத்து இளம்புயல் மகாகவி பாரதி வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடிவருவார். மழையில் நனைந்துகொண்டே, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவ ” என்று பாடுவார். பாட்டுக்குள் புயல்வைத்த பாரதிக்கும் இந்த அவைக்கும் என் பணிவான வணக்கம். வீடு அஃதொரு சிறிய கூடு.

அதற்குள்தான் எத்தனை முரண்பாடு. குடும்பத்திற்குள் இருந்த குதூகலமான உரையாடல் தற்போது தொலைந்து போய்விட்டது. ஆனால், கல்வியே வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று எதிரணி சொல்கிறது. நடுவர் அவர்களே!

வீடு என்னும் சிறிய வட்டத்தைத் தாண்டி நாட்டை நாடிய பின்தான் நல்வாழ்வு துளிர்க்கத் தொடங்குகிறது. பாரதியையே எடுத்துக் கொள்வோம், பாரதி வீதிக்கு வந்தார். உலகத்தைப் படிக்கத் தொடங்கினார். அதுவே, பாரதிக்குப் புதிய திசைகளை அறிமுகப்படுத்தியது.

XI Std Tamil “தமிழா! பயப்படாதே. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” என்று நமக்குக் கட்டளையிட்டார். ’ தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்’ என்று கல்விக்கூடங்களின் இன்றியமை யாமையைச் சினத்துடன் எடுத்துக்காட்டினார்.

வீடு என்பது உறவுகளுக்குள்ளேயே நம்மைச் சுற்றவைக்கிறது. ஆனால், நாட்டின் கல்விச்சாலையோ புத்தகங்களின் ஊடே உலகத்தைத் திறந்து காட்டுகின்றது. வேறுபாடுகளைக் கடந்து

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →