📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 60question

• மகரமெய் கெட்டுப் புணரும்

Chapter 2: Front Matter · Tamil

• மகரமெய் கெட்டுப் புணரும் • மகரமெய் கெட்டு இன மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும். • மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும். பாடம் + வேளை - பாடவேளை - மகரமெய் கெட்டுப் புணர்ந்தது. பழம் + தோல் - பழ + தோல் - பழத்தோல் - மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணர்ந்தது.

கால ம் + கடந்தவன் - கால ங்கடந்தவன் - வருமொழி முதலெ ழுத்துக்கேற்ப மகரமெய் திரிந்து புணர்ந்தது. ஐ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி பண்புப்பெயர்ச்சொல் நிலைமொழிச் ச@ொல்லாக நின்று வருமொழிச்சொல்லுடன் புணரும்போது பின்வரும் மாற்றங்களை அடையும்.  . நிலைமொழியின் இறுதியில் உள்ள மை கெட்டுப் புணரும்.

பெருவழி - பெருமை + வழி - ‘ஈறுபோதல்’ விதிப்படி ‘மை’ விகுதி கெட்டுப் பெருவழி எனப் புணர்ந்தது. . மை விகுதி கெட்டு நிலைமொழிச் ச@ொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாகத் திரியும். பெரியன் - பெருமை + அன் பெரு + அன் - ஈறுபோதல் பெரி + அன் - இடை உகரம் இய்யாதல் பெரி + ய் + அன் - உடம்படுமெய் ‘ய்’ இடையில் தோன்றும் பெரியன் - (ய்+அ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

. மை விகுதி கெட்டு நிலைமொழிச் ச@ொல்லின் முதலில் உள்ள குறில் எழுத்து நெடில் எழுத்தாய் மாறும். மூதூர் - முதுமை + ஊர் முது + ஊர் - ஈறுபோதல் மூது + ஊர் - ஆதிநீடல் மூத் + ஊர் - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் மூதூர் - (த்+ஊ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே . மை விகுதி கெட்டு நிலைமொழிச் ச@ொல்லின் முதலில் உள்ள அகரம் ஐகாரமாக மாறும்.

பைந்தமிழ் - பசுமை + தமிழ் மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல்- ) XI Std Tamil பசு + தமிழ் - ஈறுபோதல் பைசு + தமிழ் - அடி அகரம் ‘ஐ’ ஆதல் பை + தமிழ் - இனையவும் ‘சு’ கெட்டது பைந்தமிழ் - (ந்) இனமிகல் என்னும் விதிப்படி. . மை விகுதி கெட்டு நிலைமொழிச் ச@ொல் ஒற்று இரட்டிக்கும். நெட்டிலை - நெடுமை + இலை நெடு + இலை - ஈறுபோதல் நெட்டு + இலை - தன்னொற்றிரட்டல் நெட்ட் + இலை - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் நெட்டிலை - (ட்+இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் தன்னொற்றிரட்டல் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.

 வெற்றிலை - வெறுமை + இலை – வெற்று + இலை - வெற்றிலை எனப் புணர்ந்தது. . ஈறுபோதல் விதியின்படி மை கெட்டு நிலைமொழியின் இறுதி எழுத்து மகர மெய்யாக இருந்தால் ‘முன் நின்ற மெய் திரிதல்’ விதியின்படி புணரும். செந்தமிழ் - செம்மை + தமிழ் செம் + தமிழ் - ஈறுபோதல் செம் + தமிழ் - (ம்-ந்) முன் நின்ற மெய் திரிதல் .

 ஈறுபோதல் விதியின்படி மை விகுதி கெட்டு, நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின் ‘இனமிகல்’ விதியின்படி புணரும். கருங்கடல்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →