உரைநடை உலகம் XI Std Tamil ஆகிய திராவிடப் பழ ங்குடி இனக்குழுப் பெய ர்களும் ‘ மலை’ , ‘ குன்று’ என்ற பொ ருள் தரும் சொற்களையே அடிப்படையாகக்கொண்டு ஆக்கம் பெற்றுள்ளன. மலைக்குடியிருப்புகள் திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், அப்பழங்குடியினர்தம் மலை சார்ந்த வாழ்வியலின் சமூக, சமயக்கூறுபாடுகள் குறித்த புரிதலைத் தருகின்றன. பழ ங்குடியினர் ஓடும் நீரையே தங்கள் குடிநீராகப் பயன படுத்தும் இயல்புடையவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்திலோடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகுகிறார்கள்.
நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொ ட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்கள். எனவே அவற்றைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்களை அமைத்திருக்கின்றனர். அவர்களின் வீடுகளில் திண்டுகள் ( மேடைகள்) முக்கிய இடம் பெறுகின்றன. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் ‘மெட்டு’ என்ற சொல் அதன் உயரமான, மேடான அமைப்பை விளக்குகின்றது.
ஆந்திராவிலும் ஒடிஸாவிலும் உள்ள ‘ஜதாப்பு’ எனப்படும் திராவிடப் பழ ங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பா லும் மலை உச்சிகளில் அமைந்துள்ளன. பழ ங்குடித் தலைவரின் வீடு, மற்ற வீடுகள விட உயரமான இடத்தில் அமைந்துள்ளது. உயரமான மேடை, திண்ணை, சுற்றுச்சுவர்கள், மேலோடை நீர் ஆகியவை திராவிடப் பழ ங்குடியினரின் வாழ்விட வடிவமைப்பிலும் வாழ்வியலிலும் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன. வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப்பெயர்கள் திராவிடச் சொல்லான ‘ மலை’ என்பது சமஸ்கிருத மொழியில் ‘மலய’ என்று வழங்கப்படுகிறது.
பாண்டிய மன்னன் ஒருவன் ‘மலயத்துவஜ’ என்று அழைக்கப்பட்டான் என்பதும் ‘மலய’ என்ற சொல்லின் திராவிடத் தொடர்புக்கு அரண் சேர்க்கிறது. மேலும், வடமொழியில் ‘மலய’ என்ற சொல் மலபாருக்கு மேற்கே உள்ள மலைகள யே குறிக்கிறது. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் ‘மலை’ என்பது ‘உயரமானது’ என்றும் ‘குன்று’ என்பது ‘உயரம் குறைவானது’ என்றும் பொ ருள்படுவனவாகும். மலை, குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொ ணரும் உயர வேறுபாட்டை வடமேற்குப் பகுதிகளில் பயன படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதிசெய்வது வியப்பளிக்கின்றது.
இதைப்போலவே தமிழ் மொழியில் ‘வரை’ என்ற சொல் கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை , எல்லை, நுனி போன்ற பொருள்களில் பயன படுத்தப்படுகின்றது. நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் ‘வரை’ என்ற சொல் விளிம்பு என்ற பொ ருளில் பயன படுத்தப்பட்டுள்ளது. XI Std Tamil திராவிட நிலப்பகுதிகளின் மலை தொடர்பான சொற்கள், சிந்துவெளிப் பண்பாட்டு நிலப்பகுதிகளில் தற்செயலாக வழங்கப்படவில்லை. அவை, காரணம் கருதியே வழங்கப்பட்டன.
சிந்துவெளி மற்றும் திராவிட மலைவாழ் மக்கள் அன்றாடம் புழங்கும் சொற்களில் காணப்படும் இத் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு மாநில இடப்பெயர்களில் திராவிட இடச்சொற்களின் நேரடித் தொடர்பு இன்றுவரை நீடிப்பதை, கீழுள்ள அட்டவணை உறுதிப்படுத்தும். திராவிடச் சொற்கள் மாநிலம் மாவட்டம் மலை உத்தரகாண்ட் சமோலி ஜார்கண்ட் கும்லா உத்திரப் பிரதேசம் ஜவுன்பூர் வரை குஜராத் வல்ஸட் மஹாராஷ்ட்ரா தாணே ஹிமாசலப் பிரதேசம்காங்க்ரா மலா பஞ்சாப் ஜலந்தர் ராஜஸ்தான் அஜ்மீர் கர்நாடகம் உடுப்பி தென்னிந்தியாவில் ‘ மலை’ என்ற இடப்பெயரின் சிறப்பிடம் தமிழ்நாட்டில் மட்டும் ‘மலை’ என்ற சொல் இடப்பெயர்களில் முன் னொட்டாகவும் இடப்பெயர்களில் பின் னொட்டாகவும் இடம்பெறுகின்றது.