பாடப் பகுதி n நவீன நாடக வரலாறு n தமிழ்த் திரைப்பட வரலாறு n திரைக்கலை நுட்பங்கள் n இலக்கியமும் திரைப்படமும் n நாட்டார் அரங்கக் கலைகள் நவீன நாடகம், திரைக்கலை, நாட்டார் அரங்கக்கலை ஆகியன அரங்கவியலின் கூறுகளாக அறியப்படுகின்றன. நாடகக்குழுக்களின் தEோற்றம் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் நடத்திய நாடகம் தEொடர்பான கருத்தரங்கும் பயிற்சிப் பட்டறையும் நவீன நாடகக்குழுக்கள் தEோன்றக் காரணமாயின. இவ்வகை நாடகக்குழுக்களில் பயிற்சி பெற்றவர்கள் திரைத்துறையிலும் வெற்றிபெற்றனர். முதலில் நவீன நாடக வரலாற்றைப் பேசும் இவ்வியல் பின்னர், தமிழ்த்திரைப்பட வரலாற்றையும் பேசுகிறது. திரைக்கலை நுட்பங்கள், இலக்கியத்தைத் திரைப்படமாக்குதல் குறித்த செய்திகள் மாணவர்தம் படைப்பாற்றலைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் மாவட்டங்கள் தEோறும் அவ்வம்மாவட்டங்களின் மரபு சார்ந்து நிகழ்த்தப்படும் கலைகளே நாட்டார் அரங்கக்கலைகள். இவை இன்றளவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பிட்ட காலங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அரங்கக்கலையை உயிர்ப்போடு வைத்திருக்கும் காரணிகளில் இன்றியமையாததாக இக்கலைவடிவத்தைக் கூறல ம். ’நாட்டார் அரங்கக்கலை’ என்னும் பகுதி தமிழகத்தின் மரபார்ந்த கலைகளை மீட்டெடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. Ø நவீன நாடகங்களின் தEோற்றம் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுதல். Ø தமிழ்த்திரைப்பட வரலாறு பற்றித் தெரிந்து கொள்ளுதல். Ø இலக்கியம் திரைப்படமாகும் விதத்தைப் புரிந்து கொள்ளுதல். Ø திரைக்கலை நுட்பங்களைத் தன் படைப்புகளில் பயன்படுத்துதல். Ø நாட்டார் அரங்கக்கலைகளை நிகழ்த்தும் திறன் பெறுதல். 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 129poem
பாடப் பகுதி
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →