பயிற்றுமொழிகள் – தமிழ், ஆங்கிலம் தமிழகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தாய்மொழி, முதல்மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் (Second Language) பயிற்றுவிக்கப்படுகின்றன. பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தாய்மொழியும் ஆங்கிலமும் பயிற்றுமொழிகளாக (Medium) உள்ளன. பெரும்பான்மை யாகப் பொ றியியல், மருத்துவம்சார்ந்த படிப்புகளில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக உள்ளது. ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், புதிதாக மற்றொரு மொழியைக் கற்கும்போது, தம் தாய்மொழியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இயல்பு. ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமன்றிப் பாடமாகவும் கற்பிக்கப்படுவதால் தமிழோடு ஆங்கில ஒப்பீடு இன்றியமையாததாக உள்ளது. மாணாக்கர், ஆங்கிலப்பாடத்தைக் கற்கும்போது, அதன் மொழிக் கட்டமைப்பு களையும் இலக்கணக்கூறுகளையும் தமிழோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் Active Voice, Passive Voice தEொடர்களைப் படிக்கும் மாணாக்கர், தமிழின் செய்வினை, செயப்பாட்டுவினைத் தEொடர்களை நினைவுகூர்வர். ஆங்கிலத்தில் Adjective, Adverb பற்றிப் படிக்கும்போது, தமிழின் பெயரடையும் வினையடையும் நினைவுக்கு வரும். (பதினோராம் வகுப்பில் படித்ததும் நினைவுக்கு வரும்.)
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 176poem
பயிற்றுமொழிகள் – தமிழ், ஆங்கிலம்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →