பெயரெச்சமும் வினையெச்சமும் தமிழில், ஒரு தEொடரில் எத்தனை எச்சங்கள் இருக்கின்றன எனக் கணக்கிட்டால், அத்தனை தனித்தனித் தEொடர்கள் இணைந்துள்ளன என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, அவன் வந்தான் அவன் பார்த்தான் அவன் சென்றான் என்னும் மூன்று முற்றுத்தொடர்களையும் அவன் வந்து பார்த்துச் சென்றான் என (வினை) எச்சங்களால் ஆன முற்றுத்தொடராக்கலாம். ஆங்கிலத்திலும் இவை பல முற்றுத்தொடர்களைப் பெற்ற தEொடராகக் கொள்ளும் பண்பு உண்டு. He came.
He saw. He went. He came, saw and went. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படைத் தEொடர்களை இணைத்து, ஒரே தEொடராக மாற்றுவதற்கு எச்சங்கள் பயன்படுகின்றன.
ஆனால், இந்தோ – ஐரோப்பிய மொழிகளில் இவ்விடத்தில் இணைப்பு இடப்பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில மொழியில் இரு தEொடர்களை இணைக்க, இணைப்பு இடப்பெயர்கள் பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் தமிழில் பெயரெச்சங்களையோ வினையாலணையும் பெயர்களையோ பயன்படுத்துவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, I read a book, which was given by you என்னும் தEொடரில், Which (Relative Pronoun) என்பது, இணைப்பு இடப்பெயராகும். இதே தEொடரைத் தமிழில், ‘நீ கொடுத்த புத்தகத்தை நான் படித்துவிட்டேன்‘ எனக்கூறும்போது, ‘கொடுத்த புத்தகம்‘ என்பது பெயரெச்சம் ஆகும்.
இவ்வாறே தொடரில் வினையெச்சமும் பயின்று வருவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, Kannan came. Kannan went. என்னும் இரு தEொடர்கள் Kannan came and went என்று ஒரே தEொடராக அமையலாம்.
ஆனால் தமிழில், கண்ணன் வந்தான்; கண்ணன் சென்றான் என்னும் இரு தEொடர்கள், கண்ணன் வந்தானும் சென்றானும் என்று ‘உம்‘சேர்த்து எழுதப்படுவதில்லை. மாறாக, கண்ணன் வந்து சென்றான் என்று வினையெச்சத்தைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது.