📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 217poem

தEொலைக்காட்சியின் தEோற்றம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

தEொலைக்காட்சியின் தEோற்றம் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜான் லெகி பெயர்டு (John legie baird) காட்சி ஒளிபரப்பு பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கம்பியில்லாத் தந்திக் கருவி மற்றும் சில மின்கலன்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவ்வாய்வின் விளைவாக ஒரு பொம்மையின் உருவத்தை ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்கு அனுப்பி வெற்றி கண்டார். ஒரு சிறுவனைத் தமது படம் பிடிக்கும் கருவி முன் நிறுத்தி, அவனது கை, கால்களை அசைக்க வைத்து அக்காட்சியினை ஒளிபரப்பி மகிழ்ந்தார். தனது இந்த அரிய கண்டுபிடிப்பை இலண்டனில் உள்ள ராயல் குழுமத்தில் பதிவு செய்துகொண்டார். முதன்முதலாகப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் ஒளிபரப்பப்பட்டன. அது கறுப்பு, வெள்ளை நிறக் (Black and White) காட்சி ஒளிபரப்பாகும். பின்னர், அமெரிக்காவில் வண்ணநிற (Colour) ஒளிபரப்பு தொடங்கப் பட்டது. தொடக்க காலத்தில் படம்பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும் போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா (VTR-Video Tape Recorder) என்ற கருவியை உருவாக்கியது. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்பம் கொண்ட படப்பிடிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →