தீரா புதுடில்லி. சாரலாய் வீசும் குளிரும், வெப்பமில்லாத சூரியன் தவழும் ஜனவரி மாதத்தின் முற்பகல். பெரோஷா சாலையில் உள்ள நவீன் விஞ்ஞான்பவனின் பத்தாவது தளத்தில் அந்தக் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அகிலஉலக அளவிலான இயற்கைமொழி ஆய்வரங்கம் அது. பன்னாட்டுக் கணினி மொழியியல் அறிஞர்கள் கூடியிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருந்தன. அருகமை சாலைகள் மீட்டர் அளவுக்கு மூடப்பட்டிருந்தன. அந்த வானுயர்ந்த கட்டடத்தைச் சுற்றியுள்ள வான்வெளி, இந்தியத் தகவல் பாதுகாப்புத் துணைக்கோளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை மீறி எந்தவொரு மின்னணு சமிக்ஞையையும் அங்கிருந்து வேறு யாரும் பெறமுடியாது. சகல நவீன தொழில்நுட்பங் ளோடும் அமைந்திருந்த அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கின் நீள்வட்ட மேசைகளில், லேசர் தொடுதிரை மேசைக் கணினிகளோடும் தலை வழியே பொருத்தப்பட்ட நுண் பேசிகளோடும் அமர்ந்திருந்தார்கள் விஞ்ஞானிகள். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் கணினிமொழி வல்லுநர் கந்தர்வன் இந்தியாவின் சார்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருப்பது சுற்றிலுமிருந்த கண்ணாடிச் சுவர்களில், பாய்ச்சப்பட்ட ஒளி நழுவங்களாய் ஓடிக்கொண்டிருந்தது. ”வணக்கம் நண்பர்களே. மனிதனைப் போலவே ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அதன் வழியே சுயமாகச் சிந்திக்கவல்ல, சிந்தித்ததை வெளிப்படுத்தவல்ல கணினிகளை
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 263poem
தீரா
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →