📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 158grammar_exercise

திரைப்பட ரசனை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

திரைப்பட ரசனை சிறந்த இலக்கியம் என்பது மனிதர்களை மேம்படுத்தும். சிறந்த திரைப்படம் என்பது மனிதர்களைப் பண்படுத்தும். நம்மை அடுத்த நிலைக்கு நகர்த்தும். சிறந்த ஒரு திரைப்படமானது, மனிதர்களை முற்றிலும் மாற்றும் திறன் உடையது.

அப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்குவதே சினிமா ரசனை. திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கான கலை வடிவம் அன்று. ஒரு திரைப்படத்தை ரசனையோடு அணுகும் முறையே திரைரசிகராக நம்மை உருவாக்குகின்றது. ஒரு திரைப்படம் சொல்லும் கருத்து, இயக்குநரின் பார்வை, காட்சி அமைப்பு, படத்தின் இசை, படத்தொகுப்பு எனப் பல்வேறு கோணங்களில் காணும் அனுபவமே திரைப்பட ரசனையாக மாறுகிறது.

இவற்றையெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்போது நாம் கவனித்தால், அது நம் ரசனையை மேம்படுத்தும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →