📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 152definition

திரைமொழி

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

திரைமொழி திரைமொழி என்பது உலகத் திரைப்படங்கள் முழுமைக்குமான ஒரு பொதுமொழி. அது பாத்திரங்கள் வாய் திறந்து பேசும் மொழியன்று. அவர்களது முகபாவனை, அபிநயம், அவர்கள் தEோன்றும் இடச்சூழலான காட்சியமைப்பு, அவர்களின் ஒப்பனைக் கோலம், பின்னணியில் எழும் ஓசைகள், இசை, பாடல்கள், திரைப்படம் புகழ் மிக்க நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான சார்லி சாப்ளின் ஊமைப்படங்களையே தயாரித்து வருவதைக் கண்டு பொறுமையிழந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சாப்ளினிடம் கேட்டார்கள். ”பேசும் படம் எடுப்பதானால் செலவு கூடுதலாக வரும்தான்; உங்களை விடவும் வசதி குறைந்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் பேசும் படங்களை எடுக்கும்போது, நீங்கள் மட்டும் இன்னமும் ஊமைப்படங்களையே தயாரிக்கிறீர்களே, ஏன்?“ என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்விக்குச் சார்லி சாப்ளின் இவ்வாறு பதிலுரைத்தார். ”என் படங்கள் ஊமைப்படங்கள் என்று கூறுவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அவற்றைப் பார்க்கும் உங்களுக்கு அந்தப் படங்கள் கூறும் செய்தி புரிகிறதல்லவா? அவ்வாறெனில், அந்தப் படங்கள் உங்களோடு பேசிவிட்டன என்று தானே அர்த்தமாகிறது!

என் திரைப்படங்கள் திரைக்கே உரிய அதன் சொந்த மொழியில் பேசுகின்றன (It speaks in its own language) என்றார். மேலும் ”என் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல், ஆங்கில மொழியில் பேசியிருந்தால், அது ஆங்கிலம் தெரிந்த குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும். ஆனால் என் படங்கள் திரைமொழியில் பேசுவதால், உலகின் அனைத்துப் பகுதியிலும் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் புரிகின்றது. என் படங்கள் வட்டார மொழிப் படங்கள் அல்ல.

அவை உலகப் பொதுமொழியில் (Universal Language) பேசும் உலக மொழிப் படங்கள் ஆகும்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →