📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 139poem

திரையரங்கு

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

திரையரங்கு 1900இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். 1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்‘ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத் தைத் தEொடங்கினார். தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்‘ இதுவே. அதன் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி‘ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →