📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 198poem

திறனாய்வாளர்கள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

திறனாய்வாளர்கள் இலக்கியம் எவ்வளவு பழைமை யானதEோ, அவ்வளவு பழைமை யானது அதனைப் பற்றிய திறனாய்வும் என அறிஞர்கள் கூறுகின்றனர். யாராவது ஒருவர் ஒரு பாடலையோ, ஓர் உரைநடையையோ எழுதியிருப்பார். அதனைப் படிப்பவர், ஆஹா, நன்றாக உள்ளது அல்லது மட்டமாக உள்ளது என்று கூறும்போதே திறனாய்வாளராகவும் அவர் மாறிவிடுகிறார். அதே வேளையில் படிப்பவர் எல்லாரும் திறனாய்வாளராக மாறுவதில்லை. திறனாய்வாளர், படை ப்பவருக்கும் படிப்பவருக்கும் இடையே ஒரு பாலமாக விளங்குகிறார். ஏன் தெரியுமா? ஓரிலக்கியம் படைக்கப்பட்டவுடன் படிக்கப்படலாம் அல்லது பல ஆண்டுக்குப் பின்னரும் படிக்கப்படலாம். அவ்விலக்கியம் உருவான காலச்சூழல், பின்னணி ஆகியவற்றைத் தெள்ளத் தெளிவாகத் திறனாய்வாளர்தாம் வெளிப்படுத்தியிருப்பார். இல்லையெனில், அவ்விலக்கியத்தைப் படிப்பவருக்குக் குழப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டாகப் பாரதியார் பாடல்கள் தE ன்றியதன் பின்னணி, விடுதலை உணர்வை வேண்டி நின்ற காலமாக இருந்தது. இக்காலத்தில் அத்தகைய சூழல் இல்லை. எனவே, படைப்புகளை அக்காலத்திய சூழலோடு பொருத்தி, ஆய்வுசெய்பவர்தாம் திறனாய்வாளர். அவர், படை ப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையேயுள்ள தலைமுறை இடைவெளிகளையும் காலவேறுபாடுகளையும் குறைக்கிறார். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →