திறன்பேசி திறன்பேசி என்பது தொடுதிரையுடன் (Touch Screen) கூடிய கையடக்க அலைபேசி. திறன்பேசி, இணையத் தேடல் வசதியுடன் கணினியின் திறன்களை க் கொண்டதாகத் திகழ்கிறது. திறன்பேசியின் அளவும் அதன் நகர்வியக்கமும் கணினியிலிருந்து அதை வேறுபடுத்துகிறது. இது தகவல் தொடர்புக் கருவி என்னும் நிலைகடந்து கற்றல், தேடல் இயந்திரமாகவும் பொழுதுபோக்குக் கருவியாகவும் விளங்குகிறது.
ஆம் ஆண்டே தொடுதிரையுடன் பயனருக்கு உதவும் பல பயன்பாடுகளைக் கொண்ட திறன்பேசி உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், அப்பொழுது “திறன்பே சி” என்ற சொல்தான் உருவாகவில்லை. அதாவது, ஸ்மார்ட்ஃபோன் என்று குறிப்பிடும் வழக்கம் பின்னரே தோன்றியது.