📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 148poem

காட்சி (Scene)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

காட்சி (Scene) இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனிக் காட்சித்துணிப்புகளாக எடுத்து அவற்றை ஒன்றாக இணைத்தே ஒரு காட்சி (Scene) உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் நிகழும் ஒரு நிகழ்ச்சியைக் காட்டும் பல்வேறு காட்சித்துணிப்புகளின் தEொகுப்பே காட்சி. இக்காட்சியானது எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே காட்சித்துணிப்பாகவும் இருக்கலாம். காட்சித்துணிப்பு அண்மைக் காட்சி (Closeup Shot), இடைநிலைக் காட்சி (Mid Shot), சேய்மைக் காட்சி (Long Shot) , முழுக்காட்சி (Full Shot) எனப் பல வகையாக அமையும். அண்மைக் காட்சியாக எடுக்கும்போது இவை தனித்தனி காட்சித்துணிப்புகளாகவும் முழுக்காட்சியாக, சேய்மைக்காட்சியாக எடுக்கும்போது ஒரே காட்சித்துணிப்பாகவும் இருக்கின்றன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →