📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 220poem

கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. நடனம், நாட்டியம், இசை, பாடல், பலகுரல் முதலான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களமாக இவ்வகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இதற்காகத் தனியே போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளில், தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் கிராமியக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விழாக்காலங்களில் விழாவின் பெருமையினைப் போற்றும் வகையிலும் நேயர்களை மகிழ்விக்கும் வகையில் தொலைக்காட்சிக் கலைஞர்களால் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. வானொலியில் நிகழ்த்தப்படும் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, கிராமியக் கலைகள் போன்றவற்றிற்கெனத் திரளான நேயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →