களமும் முறையும் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த திறந்தவெ ளி ஆடுபரப்பில் இக்கூத்து நிகழ்த்தப்படுகின்றது. தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே களரி அமைக்கப்படும். அத் திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் களரியாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கூத்தாடும் களத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தEோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர். பொதுவாக தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வே டமிட்டு நடிப்பர். இப்போது பெண்க ளும் கூத்துப் பாத்திரங்களை ஏற்று நடிக்க முன்வந்துள்ளனர். கூத்தில் வேடம் கட்டுபவர்கள், கூத்து தEொடங்கி முடியும் வரை நோன்பிருப்பது வழக்கம். இரவு பத்து மணிக்குத் தEொடங்கி மறுநாள் காலை வரையிலும் நிகழ்த்தப்படுகின்றது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 164poem
களமும் முறையும்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →