இயக்குநர்கள் அறுபதுகளில் புதிய இயக்குநர்கள் பல ர் தமிழ்த் திரையுலகில் நுழைந்தனர். பீம்சிங் என்ற இயக்குநர் ‘பாவ மன்னிப்பு‘, ‘பார்த்தால் பசி தீரும்‘ ஆகிய படங்களை இயக்கிப் புகழுடன் விளங்கியவர். ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்‘ படத்தின் மூலம் சிறந்த புராணப்பட இயக்குநர் என்ற பெயரைப் பெற்றுப் பல படங்களை இயக்கினார். ஸ்ரீதர் ‘கல்யாணப் பரிசு‘ படத்தின் மூலம் புகழ்பெற்றார். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்‘, ‘காதலிக்க நேரமில்லை‘ போன ற படங்களையும் இயக்கியுள்ளார். கம்பெனி நாடகப் பாரம்பரியத்தில் வளர்ந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ‘ கற்பகம்‘ படத்தின் மூலம் புகழ்மிக்க இயக்குநரானார். ஜெயகாந்தன் ‘உன்னைப் போல் ஒருவன்‘ என்ற தமது குறுநாவலைத் திரைப்படமாக அவரே இயக்கினார். அது தேசிய அளவில் விருதினையும் பெற்று எதார்த்தத் திரைப்படமாக அறிமுகமானது. மேடை நாடக ஆசிரியராகத் திகழ்ந்த கே. பாலசந்தர் ‘நீர்க்குமிழி‘ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராகப் புகழ் பெற்றார்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 143poem
இயக்குநர்கள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →