செயலி செல்பேசி, திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டு மென்பொருளே செயலி. இப்போது குறைந்த விலையிலேயே அதிக திறன் கொண்ட திறன்பே சிகள் கிடைக்கின்றன. அவற்றில் பலவகையான செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே, அவற்றை நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். நோக்கியா நிறுவனம் பேசவும், செய்தி அனுப்பவும் மட்டுமே பயன்பட்டுவந்த செல்பேசிகளில் முதன்முதலாகப் பொழுதுபோக்கு விளையாட்டுகளின் வடிவில் செயலியை அறிமுகப்படுத்தியது.
அப்ளிகேஷன் [Application] என்பதன் சுருக்கமே “ஆப்” [App] என்னும் சொல்லாகும். அப்ளிகேஷன் என்பது கணினியில் செயல்படும் குறிப்பிட்ட ஒரு பயன்பாட்டுக்கான நிரலாகும். ஆவணங்கள் தயாரிப்புக்கான சொல்செயலி (Word Processor), வரவுசெலவு கணக்குகளுக்கான விரிதாள் (Spread Sheet), தரவுத்தளம் (Database), நாட்குறிப்பு (Diary), கால அட்டவணை (Calendar) போன்றவை அலுவலகப் பயன்பாட்டு நிரல்களாகும். பொதுவாக இத்தகைய பயன்பாட்டு நிரல்கள் 'செயலி' [App] என்று அழைக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கெனச் செல்பேசி களில் பயன்படுத்தப்படும் செயலிகளை முதலில் குறுஞ்செயலிகள் என்றழைத்தனர்.