📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 238poem

(சிறுவர் நிகழ்ச்சி - பாலராமாயணம்)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

(சிறுவர் நிகழ்ச்சி - பாலராமாயணம்) வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்டவர் ர. அய்யாசாமி. இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்று விளங்கினார். தொடக்கக் கல்வியினை உள்ளூரிலும் பள்ளி இறுதிக் கல்வியினை சென்னை இராமகிருஷ்ணா மடத்திலும் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் லயோலா கல்லூரியிலும் பட்டப் படிப்பினை முடித்தார். கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ’தமிழ்நாடு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியேற்றார். இவர் சிறுவர்களுக்கான ‘பாப்பா மலர்’ மற்றும் ‘முத்துக்குவியல்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சி தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஒலிபரப்பாயிற்று. கவிமணி தேசிக விநாயகனார் ‘‘ராமாயணக்கதையினைத் தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’’ என்றார். கவிமணியின் கனவை நிறைவே ற்றும் வகையில் இவர் பாலராமாயணம் இயற்றினார். இதனை இசைவடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலியின் மூலம் கொண்டு சேர்த்தார். இதற்கு இசைக்கலைஞர் மல்லிக் இசையமைத்துள்ளார். எளிமை, இனிமை, பக்திமை, தனிமனித ஒழுக்கம் என பன்முக நோக்கில் கேட்பவர் உள்ளத்திற்கு இன்பம் தரும் காவியமாகப் பாலராமாயணம் திகழ்ந்தது. இவ்வொலிபரப்பிற்கு முப்பதாயிரம் பாராட்டுக்கடிதங்கள் வந்து குவிந்தன. இவர் சென்னை வானொலியில் பாலராமாயணத்துடன் மோகன காந்தி என்னும் நிகழ்ச்சியையும் வழங்கி வானொலிக்குப் பெருமை சேர்த்தார். இவரது நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பப்பட்டன. இவர் தமிழில் மட்டுமன்றி விஜயவாடாவில் தெலுங்கிலும் கோழிக்கோட்டில் மலையாளத்திலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ஒலி-ஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மைகொண்டவை. பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொலைதூரத்திற்குப் பரப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இச்சூழலில் செயற்கைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன. அதன் பயனாக இன்று உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை எளிதாக வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் வழியாக நாம் கண்டும் கேட்டும் மகிழ்கிறோம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →