மின்னூல் உருவாக்கம் தமிழில் அச்சு நூல்களைப் போன்றும் அவற்றைவிட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் இணைய வெளியில் மின்னூல்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அதன் தாக்கத்தால் அச்சு வடிவில் வெளிவந்த நூல்களும் இன்று மின்னூல்களாகப் புத்தாக்கம் பெற்று வெளிவருகின்றன. புதிதாக வெளிவரும் நூல்களை இருவடிவிலும் வெளியிடும் போக்கு, மின்னூலின் வளர்ச்சியையும் உலகளாவிய பரவலையும் தேவையையும் காட்டுகின்றது. மேலும், உயர்ந்த தரமான நூல்கள் எளிய முறையில், குறைந்த செலவில், குறுகிய காலத்தில், உலகெங்கிலும் உள்ள வாசகர்களைச் சென்றடையும் நிலை சாத்தியமாகி உள்ளது.
எனவே, மின்னூல்களாக மட்டுமே வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்னூல்களின் அமைப்பு, பயன்பாடு, உருவாக்கும் முறை ஆகியவற்றை இப்பாடப்பகுதி விவரிக்கின்றது.