📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 61grammar_exercise

மொழிப்பயன்பாடு

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மொழிப்பயன்பாடு ஒரு புதினம் அதன் கதைக்கரு, சூழல், காலம், கதைக்களம் ஆகியவற்றுக்குப் பொருந்தும்படியான மொழிநடையில் அமைதல் நலம். நடை என்பது ஓர் எழுத்தாளனின் தனிப்பட்ட திறன் அடிப்படையிலான விளைவு. அது அவனது படைப்பாளுமையை நிர்ணயிக்கும் அளவீடாகவும் விளங்குகிறது.  படைப்பாளன் தனக்கேயுரிய சொற்கள், சொல்லாட்சிகளைப் பயன்படுத்தலாம்.

அது அவனது படைப்பு மனத்தின் வெளிப்பாடு. ஆனால், தன் நடை குறித்த விழிப்புணர்வு ஒரு படைப்பாளனுக்கு இருக்கவேண்டும். இல்லையெனில், தE டர்ந்து வரும் ஒரே மாதிரியான சொல்லாட்சிகள் புதினத்தின் கலைத்தன்மையைக் குறைத்து, சலிப்புக்குள்ளாக்கிவிடும்.  புதினத்தில் வெறுமனே தகவல்களாக அளித்துச் செல்வதும் அதன் போக்கைப் பலவீனப்படுத்திவிடும்.

ஓர் அறையைப்பற்றி எழுதவேண்டுமென்றால், அதன் பொதுத்தன்மை, தனித்தன்மை இரண்டையும் சுருங்கக் குறிப்பிட்டால் போதும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →