📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 149poem

நகர்வு (Movement)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

நகர்வு (Movement) உண்மையில் படப்பிடிப்புக் கருவியை நகர்த்தாமல் படம் பிடிப்பதுதான் சரியான படப்பிடிப்பு ஆகும். உலகில் திரைப்படம் தEோன்றி வளர்ந்த ஆரம்பக் காலங்களில், அதாவது மௌனப்படக் காலங்களில், படப்பிடிப்புக் கருவியை முக்காலி நிறுத்தத்தில் ஆடாமல் அசையாமல் வைத்து ஒவ்வொரு காட்சியாகவே படம்பிடித்தனர். சும்மா இருக்கும் படப்பிடிப்புக் கருவியை இங்குமங்குமாக நகர்த்துவது நகர்வு அல்ல. படப்பிடிப்பில் படம் பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் குனிந்தோ, நிமிர்ந்தோ, பக்கவாட்டில் இடமும் வலமுமாகத் திரும்பியோ, மேலும் கீழுமாக ஏறி இறங்கியோ, முன்னும் பின்னுமாக அசைந்தோ, வட்டமாகச் சுழன்றோ வேறு வகையிலோ நகர்வதையே நாம் இங்கு படப்பிடிப்புக் கருவி நகர்வுகள் என்று குறிப்பிடுகிறோம். இன்றும் ஹாலிவுட் படங்களில் படப்பிடிப்புக் கருவி நகர்வுகளை அதிகம் பார்க்க முடியாது. தEொடர்ச்சியான வெட்டுத் துண்டுகளாக காட்சிகள் அடுக்கப்படுவது பெரும்பான்மை யான படங்களின் அமைப்பாக உள்ளது. படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்புக் கருவியை நகர்த்த வேண்டிய சில தருணங்கள் உண்டு. அத்தகைய தருணங்களில் படப்பிடிப்புக் கருவியை நகர்த்திப் படம்பிடிப்பதால் எதார்த்தம் கெடாமல், பார்ப்பவர்களுக்கு இன்னும் தெளிவாகக் காட்சியை உணர்த்த முடியும். அண்மைக் காட்சி இடைநிலைக் காட்சி சேய்மைக் காட்சி 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →