📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 162poem

உடுக்கைப்பாட்டு

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

உடுக்கைப்பாட்டு உடுக்கு என்னும் இசைக்கருவியை அடித்துப் பாடும் கலை உடுக்கைப்பாட்டு ஆகும். இசைக்கருவியால் பெயர் பெற்ற கலை எனினும் இதில் பாடலே முதன்மை பெறும். ஒரு கதையைப் பாடி பின்னணியாக உடுக்கடிக்கும் முறையில் இக்கதை நிகழ்கிறது. இக்கலை நிகழ்ச்சியில் ஒருவர் உடுக்கை அடிக்க, ஒரு பெண்ணோ, பெண் வேடமிட்ட ஆணோ கதைப் பாடலைப் பாடி ஆடுவர். பின்பாட்டுக்காக இருவர் அல்லது மூவர் இருப்பதும் உண்டு. கோவில் சார்ந்த கலையாக முதலில் அறியப்பட்ட இக்கலை, பின்னர் சமுதாயம் சார்ந்தும் பொழுதுபோக்கிற்காகவும் உரியதாக மாறியுள்ளது. கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, நல்லதங்காள் கதை, மதுரை வீரன் கதை போன றவை உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக உள்ளன. தொல்காப்பியம் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அத்திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின் போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர். நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கிறது. 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →