உரைச்சித்திரம் வானொலி உரை நிகழ்த்துபவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளினைச் சித்திரித்து உரைக்கும்போது அது உரைச்சித்திரமாகிறது. இவ்வாறு வழங்கும் உரைச்சித்திரம் கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். மேலும் கேள்விப்பொருளானது காட்சிப்பொருளாக மனக்கண்ணில் தோன்றி நேயர்களை மகிழ்விக்கும். இரண்டாம் உலகப்போரின் போது மக்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுவதற்காக, வானொலி உரைச்சித்திரங்கள் முதன்முதலாக ஒலிபரப்பாயின. தேசிய நெருக்கடிக் காலங்களில் மக்களிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கும் விதமாக உரைச்சித்திரங்கள் நிகழ்த்தப்பட்டன. விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய உரைச்சித்திரங்களும் வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. கவிதை, இசை, பலகுரல், வருணனை, உணர்ச்சிக்கேற்ப குரல் ஏற்ற இறக்கம் எனப் பல உத்திகளைக் கொண்டு நேயர்களைத் தன்வயப்படுத்தும் வகையில் வானொலி உரைச்சித்திரங்கள் அமைந்திருக்கும். தொலைக்காட்சிகளிலும் இது போன்றே நேரலை ஒளிபரப்பாக உரைச்சித்திரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில அரசு விழாக்கள், கோவில் திருவிழாக்கள், குடமுழுக்கு, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றைக் காட்சிகளோடு வருணனையாளர்கள் தொகுத்து வழங்குவர். இந்நேரலை ஒளிபரப்புகள் நிகழ்வுகளை நேரடியாகக் காணும் அனுபவத்தை மக்களுக்கு வழங்குகின்றன.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 218poem
உரைச்சித்திரம்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →