உருபனியல் கருவிகள் ஒலிகள் சேர்ந்து சொல்லாகின்றன. அச்சொல்லின் அமைப்பு, அதோடு சேர்கின்ற விகுதிகள், அவ்விகுதிகள் வருமுறை ஆகியவற்றைப் பற்றியது உருபனியல். இந்த ஆய்வின் அடிப்படைக்கூறு உருபன் ஆகும். சொற்களை உருபன்பகளாகப் பகுக்கும் உருபனியல் பகுப்பாய்வி, உருபன்களிலிருந்து சொற்களைப் பெறும் உருபனியல் உருவாக்கி ஆகிய கருவிகளை உருவாக்குவதற்கு இவ்வாய்வு துணைபுரிகின்றது.
ஒரு சொல்லைப் பகுக்கும் போது வரும்பொருள் கொண்ட மிகச்சிறிய அடிப்படை அலகை உருபன் (morpheme) என்கிறோம். இவை அடிச்சொற்களாகவோ ஒட்டுகளாகவோ அமையும். பூக்கள் என்ற சொல்லில் பூ என்ற அடிச்சொல்லும் உருபனே; கள் என்ற பன்மை ஒட்டும் உருபனே.