📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 175poem

94. சூது

Chapter 20: 94. சூது · TAMIL

. சூது . வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. . ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டடாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதுஓர் ஆறு. . உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும். . சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல். . கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லலாகி யார். . அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும் முகடியால் மூடப்பட் டார். . பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். . பொருள்ககெடுத்துப் பொய்மமேல் கொளீஇ அருள்ககெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. . உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். . இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →